ஆதித்யா தமாங்கு

இந்திய அரசியல்வாதி

ஆதித்யா தமாங்கு (Aditya Tamang) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆதித்யா கோலே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். சிக்கிம் மாநிலத்தின் ஆறாவது முதலமைச்சரான பிரேம்சிங்கு தமாங்கு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 2013 ஆம் ஆண்டில் புதுதில்லியிலுள்ள இந்து கல்லூரியில் படித்து ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் சோரெங்கு-சகுங்கு சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][1][3][4]

ஆதித்யா தமாங்கு
Aditya Tamang
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்இராம் பகதூர் லிம்பூ
தொகுதிசோரெங்கு-சகுங்கு சட்ட மன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஆதித்யா தமாங்கு

1990/1991 (அகவை 32–33)[1]
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பெற்றோர்
வாழிடம்(s)சோரெங்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம்
முன்னாள் கல்லூரிஇளங்கலை வரலாறு, இளங்கலை ஆங்கிலம் ஆனர்சு, தில்லி இந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்[2]
தொழில்சம்மூக சேவகர்[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 PTI (24 May 2019). "SKM ends Chamling's 25-year rule in Sikkim". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/skm-ends-chamling-s-25-year-rule-in-sikkim-119052400152_1.html. பார்த்த நாள்: 12 July 2019. 
  2. 2.0 2.1 2.2 "Aditya Golay Tamang(Sikkim Krantikari Morcha):Constituency- SOREONG-CHAKUNG(WEST) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 12 July 2019.
  3. PTI (24 May 2019). "Sikkim Assembly Elections: SKM Ends Chamling's 25-Year Rule". The Wire. https://thewire.in/politics/sikkim-assembly-elections-skm-ends-chamlings-25-year-rule. பார்த்த நாள்: 12 July 2019. 
  4. "आदित्य गोले ने उठाया सिक्किम के भविष्य को उज्जवल बनाने का बीड़ा" (in hi). Nitya Samay. 10 December 2020. https://www.nityasamay.com/2020/12/10/aditya-gole-pledges-to-make-sikkims-future-brighter/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_தமாங்கு&oldid=3853135" இலிருந்து மீள்விக்கப்பட்டது