ஆந்தரே கெய்ம்

ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Андрей Константинович Гейм, Andre Konstantinovich Geim, பிறப்பு: அக்டோபர் 1, 1958), உருசியாவில் பிறந்த டச்சு இயற்பியலாளர். கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கியதற்காக இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov) என்னும் உருசிய-பிரித்தானிய ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா) உருவாக்குவதிலும் இவர் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.

ஆந்தரே கெய்ம்
பிறப்புஅக்டோபர் 1, 1958 (1958-10-01) (அகவை 65)
சோச்சி, உருசியா
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்நெதர்லாந்து
அறியப்படுவதுகிராபீனை உருவாக்கியது
தவளையை காந்தவுயர்த்தல் செய்தது
பல்லி ஒட்டு உருவாக்கியது
விருதுகள்இக்நோபெல் (2000)
மாட் பரிசு (2007)
யூரோ பரிசு (2008)
கோர்பர் பரிசு (2009)
Hughes Medal (2010)
நோபல் பரிசு (2010)

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தரே_கெய்ம்&oldid=3915204" இலிருந்து மீள்விக்கப்பட்டது