ஆன்ட்ரூ சைமன்ஸ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஆன்ட்ரூ சைமன்ஸ் (Andrew Symonds, 9 சூன், 1975 – 14 மே 2022) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டங்களில் சகலத்துறையராக விளங்கிய இவர் இருமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் ஆவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவராக இருந்தார்.

ஆன்ட்ரூ சைமன்ஸ்
Andrew Symonds
2008 இன் ஆன்ட்ரூ
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1975-06-09)9 சூன் 1975
பர்மிங்காம், இங்கிலாந்து
இறப்பு14 மே 2022(2022-05-14) (அகவை 46)
ஆர்வி ரேஞ்சு, குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
பட்டப்பெயர்ரோய், சைமோ
உயரம்187 cm (6 அடி 2 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தரம்
வலக்கை எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 389)8 மார்ச் 2004 எ. இலங்கை
கடைசித் தேர்வு26 திசம்பர் 2008 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 139)10 நவம்பர் 1998 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப3 மே 2009 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்39/63
இ20ப அறிமுகம் (தொப்பி 11)17 பெப் 2005 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப7 மே 2009 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1993/94–2009/10குயின்சிலாந்து புல்சு
1995–1996குளொசுட்டர்சயர்
1999–2004கெண்ட்
2005லங்காசயர்
2008–2010டெக்கான் சார்ஜர்ஸ்
2010சரே
2011மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 26 198 227 424
ஓட்டங்கள் 1,462 5,088 14,477 11,099
மட்டையாட்ட சராசரி 40.61 39.75 42.20 34.04
100கள்/50கள் 2/10 6/30 40/65 9/64
அதியுயர் ஓட்டம் 162* 156 254* 156
வீசிய பந்துகள் 2,094 5,935 17,633 11,713
வீழ்த்தல்கள் 24 133 242 282
பந்துவீச்சு சராசரி 37.33 37.25 36.00 33.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 2 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/50 5/18 6/105 6/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 82/– 159/– 187/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 21 ஆகத்து 2017

2008 ஆம் ஆண்டின் மத்திய காலங்களில் மதுபானம் அருந்தியது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது ஆகிய காரணங்களினால் பெரும்பாலும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.[1] சூன், 2009 ஆண்டில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியின் போது அணியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இது இவரின் மூன்றாவது இடைநீக்கம் ஆகும்.[2] இவரின் நடவடிக்கைகளால் பல நிருவாகிகள் இவரை ஓய்வு பெறும்படி கூறினர்[3]. தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக பெப்ரவரி 16, 2012 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[4]

சைமன்சு 2022 மே 14 அன்று குயின்சிலாந்து, டவுன்சுவில் என்ற இடத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.[5]

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2008 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம் இவரை 1,350,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டின் அதிக பட்ச விலைக்கு ஏலம் போனவர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதே நிர்வாகம் சகநாட்டு வீரரான அடம் கில்கிறிஸ்ற் 700,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தை எடுத்து தலைவராக நியமித்தது. முதல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஏப்ரல் 18,,2008 இல் துவங்கப்பட்டது. ஏப்ரல் 24, 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 117 ஓட்டங்கள் எடுத்தார்.[6]

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சார்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடியதால் இரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவகால தொடர்களில் இவரால் பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் இறுதிகாலப் போட்டிகளில் அணிக்காக விளையாடி வெற்றிபெற்றுத் தந்தார்.

மூன்றாவது பருவகால 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மங்கூஸ் மட்டை கொண்டு முதல் மூன்று போட்டிகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.[7][8] நான்காவது 2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 850,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.

சர்வதேச போட்டிகள் தொகு

இவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் மரபைச் சேர்ந்தவராக [9] இருந்தாலும் இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் தீர்மானித்தார்.[10] நவம்பர் 10, 1998 இல் லாகூரில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[11] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் 156 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 90 க்கும் அதிகமாக உள்ளது.

துவக்ககாலத்தில் களத்தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் மட்டையாளராகவும், பந்து வீச்சாளராகவும் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். இதனால் அணியில் நிலையான இடம் இவருக்கு வழங்கப்படவில்லை. 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Player Profile:Andrew Symonds". CricInfo. EPSN. பார்க்கப்பட்ட நாள் 6 June 2009.
  2. "Aussies rescind Symonds' contract". BBC News Online (BBC). 12 June 2009 இம் மூலத்தில் இருந்து 15 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090615064705/http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/australia/8096557.stm. பார்த்த நாள்: 12 June 2009. 
  3. Brown, Alex; English, Peter (6 June 2009). "Symonds waits to decide on future". CricInfo. ESPN. Archived from the original on 7 June 2009. பார்க்கப்பட்ட நாள் 6 June 2009.
  4. "Australian all-rounder Andrew Symonds retires from cricket". BBC Sport. BBC. 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  5. "Andrew Symonds dead at 46 after tragic car accident".
  6. ABC News (2008). Chargers lose despite Symonds century. Retrieved 15 April 2008.
  7. "Symonds helps Deccan to first home win". Cricinfo இம் மூலத்தில் இருந்து 22 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100322200532/http://www.cricinfo.com/ipl2010/content/story/452607.html. பார்த்த நாள்: 20 March 2010. 
  8. "Deccan big guns overwhelm Chennai". Cricinfo இம் மூலத்தில் இருந்து 17 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100317164822/http://www.cricinfo.com/ipl2010/content/story/451967.html. பார்த்த நாள்: 20 March 2010. 
  9. "Andrew Symonds". Sports Pundit. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
  10. Lynch, Steve. "Collingwood's rare honour, and 551 and losing". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.
  11. "Scorecard: Pakistan v Australia, 3rd ODI, at Lahore 8 Nov 1998". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரூ_சைமன்ஸ்&oldid=3586136" இலிருந்து மீள்விக்கப்பட்டது