ஆன்யு டா சிடியான்

ஆன்யு டா சிடியான் (Hanyu Da Cidian, (சீனம்: 漢語詞典/汉语词典பின்யின்: Hànyǔ Dà Cídiǎn; நேர்பொருளாக "ஃகான்யு டா சிடிஆன், அடக்கமான சீன சொல் அகரமுதலி") என்பது யாவற்றினும் அதிக சொற்களையும் சொற்கோவைகளையும் கொன்ட சீன அகரமுதலி. அகராதியியல் அளவையின் படி இதனை ஆங்கில ஆக்ஃசுபோர்டு அகர முதலிக்கு ஈடாகச் சொல்லலாம். இதில் 3000 ஆண்டு வரலாற்றுக் காலத்தில் சொற்களின் பயன்பாட்டு வரலாற்றை எடுத்துக்காட்டுகளுடன் தந்துள்ளார்கள் என்பது சிறப்புக்கூறு. தற்கால பேச்சுவழக்குச் சொற்களும் பதிவு செய்திருக்கின்றார்கள். இதன் தலைமைத் தொகுப்பாளர் இலுவோ சுஃவெங்கு (Luo Zhufeng 羅竹風 (1911-1996)), ஏறத்தாழ 300 உடன்பங்களித்த அறிஞர்களின் துணையோடு 1979 ஆம் ஆண்டு தொடங்கி, 1986 ஆம் ஆண்டு பதிப்பிக்கத் தொடங்கி பதிமூன்று தொகுதிகள் வெளியிட்டு 1993 இல் முடித்தனர்.

ஃகான்யு டா சிடிஆன் அகரமுதலியில் 23,000 தலைப்புச்சொற்களுக்கும் மேல் உள்ளன, இவற்றோடு 370,000 சொற்களுக்கு வரையறையும் 1,500,000 பயன்பாட்டுச் சான்றுகோள்களும் தந்துள்ளனர். தலைப்புச் சொற்களை 200 வகையான வேரெழுத்துகளின் கீழ் (வேர்க்கீற்றுகளில் கீழ்) (radical) வகைப்படுத்தி மரபு சீன எழுத்திலும், எளிமைபப்டுத்திய சீன எழுத்திலும் தந்துள்ளார்கள். வரையறைகளும் விளக்கங்களும் எளிமைப்படுத்திய சீன எழுத்துமுறையில் தந்துள்ளனர், ஆனால் மரபு வரலாற்று தொல்சீர் சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகளுக்கும் மரபு சீனத்தில் எழுதி விளக்கி இருக்கின்றனர்.

தொகுதி-13 இல் பின்யின் முறையிலும் கீற்று எண்ணிக்கையிலும் உள்ள பின்னடக்கச் சொற்பட்டியல் உண்டு. இது தவிர தனியான ஒரு தொகுதி (1997 இல் வெளியானது) 728,000 தலைப்புச்சொற்கள் கொன்டுள்ளது. இதில் உள்ள 20,000 பக்கங்களில் 50 மில்லியன் கூட்டெழுத்துகள் இருந்தபோதும் எளிதாகப் பயன்படுத்தும்படியாக அமைத்துள்ளனர் என்று கூறுகின்றார் வில்க்கின்சன்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்யு_டா_சிடியான்&oldid=2884138" இலிருந்து மீள்விக்கப்பட்டது