ஆப்கானிய பறக்கும் அணில்

ஆப்கானிய பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ரோடென்சியா
குடும்பம்: சியூரிடே
பேரினம்: ஈயோகுலோகோமைசு
இனம்: ஈயோகுலோகோமைசு பிம்பிரியேடசு
துணையினம்: ஈ. பி. பாபேரி
மூவுறுப்புப் பெயர்
ஈயோகுலோகோமைசு பிம்பிரியேடசு பாபேரி
(பிளைத், 1847)

ஆப்கானிய பறக்கும் அணில் (Afghan flying squirrel), அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கூறிய அகணிய உயிரி ஆகும்.[1]

விளக்கம் தொகு

ஆப்கானித்தான் பறக்கும் அணில் அழிந்துவரும் இனமாக அச்சுறுத்தப்படுவதில்லை. ஏனெனில் அது பரவலாக காணப்படுகிறது. இதன் எண்ணிக்கை அதிகம். ஆப்கானித்தான் பறக்கும் அணிலை பாதிக்கும் ஒரே அச்சுறுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட மரம் வெட்டுதல், நவீனமயமாக்கல், உரோம வர்த்தகத்திற்காக வேட்டையாடுதல். இது தோராயமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரையிலான தலைமுறை காலத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்டுக்கு இரண்டு முறை 2 முதல் 4 குட்டிகளை ஈணும்.[2]

பரவல் தொகு

ஆப்கானித்தான் பறக்கும் அணில் மலைப்பகுதியில் ஊசியிலைக் காடுகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது. ஆப்கானித்தான் பறக்கும் அணில் பின்வரும் நாடுகளில் காணப்படுகிறது.[2]

  • ஆப்கானித்தான்
  • இந்தியா
  • பாக்கித்தான்

மேற்கோள்கள் தொகு

  1. Baillie, J. 1996. Hylopetes baberi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 29 July 2007.
  2. 2.0 2.1 "Eoglaucomys fimbriatus". International Union for Conservation of Nature and Natural Resources. பார்க்கப்பட்ட நாள் 3 January 2013.

மேலும் தகவல்களுக்கு தொகு

  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்கானிய_பறக்கும்_அணில்&oldid=3619833" இலிருந்து மீள்விக்கப்பட்டது