ஆயிசா ரூபினா

ஆயிசா ரூபினா (Ayesha Rubina) இவர் ஐதராபாத்து மாநகராட்சியின் உறுப்பினரும், கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளரும், சமூக தொழில்முனைவோரும், முன்னாள் கூட்டுறவு உறுப்பினருமாவார்.[1][2][3] பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் இவர் தீவிரமாக பங்கேற்கிறார்.[4] இவர் இந்தியாவின் ஐதராபாத்தில் வசிக்கிறார்.

ஆயிசா ரூபினா
பிறப்பு3 மே 1969 (1969-05-03) (அகவை 54)
ஹைதராபாத், இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்உசுமானியா பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி

கல்வி தொகு

இவர் புனித மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைச் முடித்தார். மேலும் உசுமானியா பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆரம்பகால குழந்தை பருவ கல்வி மற்றும் கற்பித்தல் பற்றிய முதுகலைச் சான்றிதழ் பட்டமும் பெற்றுள்ளார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலைப் பட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

அரசியல் தொடர்பு தொகு

இவர் தனது சமூகப் பணிகளுக்காகவும், பொது நலனுக்கான செயல்பாட்டிற்காகவும் ஐதராபாத்தின் அரசியல் வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நபராவார். 2014 ஏப்ரலில், ஒரு செய்தியாளர் அறிக்கையின்படி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM]]) தலைவர் அசதுத்தீன் ஒவைசி கட்சியில் பெண்களுக்கான துணை அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் அதற்கு இவரை தலைமை ஒருங்கினைப்பாளராக நியமிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.[5]

குறிப்புகள் தொகு

  1. "NBT Nagar girls reign supreme".
  2. "More Muslim parents see school as passport to safe future for girls".
  3. "Ayesha, Jameel co-opted members of GHMC". பார்க்கப்பட்ட நாள் 29 October 2016.
  4. "Shades of Opinion on 'What Makes a City Beautiful?'". Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Ifthekhar, J. S. (1 April 2014). "MIM to form women's wing". பார்க்கப்பட்ட நாள் 29 October 2016 – via The Hindu. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிசா_ரூபினா&oldid=3927489" இலிருந்து மீள்விக்கப்பட்டது