ஆர்-7 ஏவுகணை

ஆர்-7 (R-7, ரசிய மொழியில்: P-7) சோவியத் ஒன்றியத்தால் பனிப்போர்க் கால கட்டத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும். இதுவே உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது 1959 முதல் 1968 வரை சோவியத் ஒன்றியத்தால் பயன்படுத்தப்பட்டது. மேற்குலகத்தில் எஸ்எஸ்-6 சாப்வுட் (நேட்டோ அறிவிப்பு பெயர்) என்று இது அறியப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் "ஜிஆர்எயு சுட்டெண் 8கே71" எனும் பெயரால் அறியப்பட்டது. இதன் மாறுபட்ட வடிவமைப்பே இசுப்புட்னிக் 1 செயற்கைகோளை விண்ணில் ஏவப் பயன்படுத்தப்பட்டது. சோயுஸ் விண்வெளி ஏவு வாகனம், மோல்னியா, வோஸ்டாக், வோச்காத் ஏவு வாகனங்கள் வடிவமைக்க அடிப்படையாக அமைந்தது.

எஸ்எஸ்-6 எறிசு

இதற்கு "செம்யோர்கா" என்ற பட்டைப் பெயரும் உண்டு. ரசிய மொழியில் இது "எண் 7" (அ) "ஏழு மனிதர்களின் கூட்டம்" எனப் பொருள்படும்.

விவரணை தொகு

R-7 ஏவுகணையானது 34 மீட்டர் உயரமும் 3 மீட்டர் விட்டமும் 280 மெட்ரிக் டன்கள் எடையும் கொண்டது. இது இருநிலைகள் கொண்டது. அவை திரவ ராக்கெட் எஞ்சினால் இயக்கப்படும். எரிபொருள்: திரவ ஆக்சிஜன் மற்றும் கெரோசின். சுமந்து செல்லும் வெடிபொருளை 8,800 மீட்டர் தொலைவு தாண்டி 5 மீட்டர் துல்லியத்துடன் தாக்கவல்லது. 3 மெகாடன் டிஎன்டி வெடிபொருளின் திறன் கொண்ட அணுஆயுதம் இதன்மூலம் ஏந்தி செல்லப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்-7_ஏவுகணை&oldid=2750962" இலிருந்து மீள்விக்கப்பட்டது