ஆர். கே. லட்சுமண்

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் (Rasipuram Krishnaswamy Laxman[1] (24 அக்டோபர் 1921 – 26 சனவரி 2015) பிரபல கேலிச் சித்திரங்கள் வரைந்துவந்த ஓர் ஓவியர் ஆவார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் இந்தியாவில் மைசூரில் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.[2][3]

ஆர். கே. லட்சுமண்
R.K.Laxman
பிறப்பு(1921-10-24)24 அக்டோபர் 1921
மைசூர், கருநாடகம், இந்தியா
இறப்பு26 சனவரி 2015(2015-01-26) (அகவை 93)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிகேலிச்சித்திர ஓவியர்
வாழ்க்கைத்
துணை
கமலா
விருதுகள்பத்ம பூசன், ரமோன் மக்சேசே, பத்ம விபூசண்
கையொப்பம்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். [4]

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை குமாரி கமலாவை (பேபி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசித்தார்.

தொழில்முறை வாழ்க்கை தொகு

 
'திருவாளர் பொதுஜனம்', ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், புனே, இந்தியா
 
A tribute to the late R. K. Laxman by cartoonist Shekhar Gurera

இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்[5]. சென்னையின் செமினி இசுடியோவில் (Gemini Studio) ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (Karanjia) சில கேலி சித்திரங்கள் வரைந்தார்[6]. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(State's People Supplement.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது.[7][8] லட்சுமண் பிரி பிரசு சர்னலில் பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார்.[8]

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயணின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .[2]

சர்ச்சை தொகு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[9] இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர்.[10][11][12][13] கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது.

மறைவு தொகு

2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் புனே நகரில் காலமானார்.[14].[15]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ranga Rao (1 January 2006). R.K. Narayan. Sahitya Akademi. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1971-7. http://books.google.com/books?id=Lgs4ebrb6XAC&pg=PA11. பார்த்த நாள்: 11 March 2012.  Pg.11 in the source says that Laxman & his brother Narayan were Tamil Iyer Brahmins.
  2. 2.0 2.1 "கார்ட்டூன் மேதை ஆர்.கே.லக்ஷ்மன்". தி இந்து. 24 அக்டோபர் 2013. http://tamil.thehindu.com/opinion/blogs/கார்ட்டூன்-மேதை-ஆர்கேலக்ஷ்மன்/article5263946.ece. 
  3. "Times of India cartoonist RK Laxman dies after illness". பிபிசி. 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
  4. 'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு - விகடன்
  5. "Vijaya Karnataka to re-publish series of R K Laxman's cartoons". TheNewsMinute. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
  6. "R.K. Karanjia: Living through the Blitz". TheHindu. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
  7. "R.K. Laxman: King of the cartoon". IndiaToday. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
  8. 8.0 8.1 "The uncommon man: R.K. Laxman (1924-2015)". TheHindu. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Laxman's controversial cartoon on anti-Hindi agitation draws ire of Tamil parties". Week End Leader. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015.
  10. "Now, controversy over cartoon on anti-Hindi agitation in NCERT textbooks in TN". Times Of India. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015.
  11. "Remove anti-Hindi agitation cartoon from NCERT text book: Karunanidhi". Times Of India. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015.
  12. "Is TN still over-sensitive about the anti-Hindi movement?". IBNlive. Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. "TN parties unite against cartoon 'defaming' anti-Hindi stir". DNA India. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015.
  14. "ஆழமான கருத்து, ஆனால் புண்படாத நகைச்சுவை" : ஆர் கே லக்ஷமண் பாணி
  15. http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._லட்சுமண்&oldid=3777439" இலிருந்து மீள்விக்கப்பட்டது