ஆர். சிவராமன்

ஆர். சிவராமன் (R. Sivaraman)(இறப்பு 2007) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் (194) சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

2001ல் சிவராமன் மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கே.கே.உமாதேவனிடம் தோற்றுப்போனார்.[2]

திமுக கட்சித் தலைவர் கருணாநிதியின் மகனான மு. க. அழகிரியின் நெருங்கிய நண்பராக இருந்தார். முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த நபருமான தா, கிருட்டிணன். கொலை வழக்குத் தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டபோது வன்முறை ஏற்படக்கூடும் என்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிலகாலம் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுப் பிணை வழங்கப்பட்டது.[3]

2006ஆம் ஆண்டில் திருப்பத்தூரில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்காததால் சிவராமனின் ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் அதிருப்தி அடைந்தனர். பின்னர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.[4]

2007ஆம் ஆண்டில் கல்குவாரிக்கு சொந்தமான சிவராமன் இதன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தக் குற்றச்சாட்டில் சிவராமன் கைது செய்யப்பட்டார்.[5] இது தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.[6] சிவராமன் 8 ஜூலை 2007 அன்று 46 வயதில் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 296. Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "Azhagiri's associate granted conditional bail". Zeenews. 30 May 2003. http://zeenews.india.com/home/azhagiris-associate-granted-conditional-bail_101809.html. பார்த்த நாள்: 2017-05-15. 
  4. "Tirupattur heading for a photo-finish". The Hindu. 6 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tirupattur-heading-for-a-photofinish/article3129407.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  5. "Business rivalry: vandalism case against ex-DMK MLA". OneIndia. 13 February 2007. http://www.oneindia.com/2007/02/13/business-rivalry-vandalism-case-against-ex-dmk-mla-1171384549.html. பார்த்த நாள்: 2017-05-15. 
  6. "TN: Municipal chairman killed in blast". Rediff. 29 June 2007. http://www.rediff.com/news/2007/jun/29blast.htm. பார்த்த நாள்: 2017-05-15. 
  7. "Former MLA dead". The Hindu. 9 July 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Former-MLA-dead/article14790556.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிவராமன்&oldid=3542810" இலிருந்து மீள்விக்கப்பட்டது