ஆர். விஸ்வநாதன்

ஆர். விஸ்வநாதன் (R. Viswanathan) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பணிபுரிந்தார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை வேளாண்மை துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[1] இவர் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ரெட்டியார்பாளையம் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆவார். இவர் அகில இந்திய மாணவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் சங்கப் புதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் அனத்திந்திய தொழிற் சங்கக் காங்கிரசின் தலைவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "CPI contest polls after 47 years in Puducherry, announce R Vishvanathan as party candidate". March 20, 2014.
  2. "CPI fields former Minister Viswanathan for Puducherry". The Hindu. March 20, 2014. https://www.thehindu.com/news/cities/puducherry/cpi-fields-former-minister-viswanathan-for-puducherry/article5809264.ece. 
  3. "CPI Fields Viswanathan for Puducherry Seat". The New Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._விஸ்வநாதன்&oldid=3829428" இலிருந்து மீள்விக்கப்பட்டது