ஆர். வேலாயுதன்

இந்திய அரசியல்வாதி

ஆர். வேலாயுதன் (R. Velayudhan) (பிறப்பு மார்ச் 23,1911, இறப்பு தேதி தெரியவில்லை) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கொல்லம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]

ஆர். வேலாயுதன்
கொல்லம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1957
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்எம். கெ. குமரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 March 1911 (1911-03-23)
துணைவர்தாக்சாயணி வேலாயுதன்
பிள்ளைகள்4 மகன்கள் மற்றும் 1 மகள்
பெற்றோர்
  • இராமன் கேலன் (father)

ஆரம்ப வாழ்க்கை தொகு

ஆர். வேலாயுதன் 1911 மார்ச் 23 அன்று பிறந்த இவர் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் மற்றும் குறுவிலங்காடு ஆகிய இடங்களில் தமது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கோட்டயம் , சி. எம். எஸ். கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் , கலைக் கல்லூரி மற்றும் மும்பை டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் உயர் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை தொகு

வேலாயுதன் ஒரு அரசியல் தொண்டராகவும், பத்திரிகையாளராகவும் தனது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டார்.[2] இதற்கு முன்பு இவர் அகில இந்திய அரிசன சேவா சங்கத்தில் ஆராய்ச்சி அறிஞராக இருந்தார். 1941 முதல் 1945 வரை டாட்டா எண்ணெய் ஆலையில் தொழிலாளர் நல அதிகாரியாகவும், பின்னர் 1945 முதல் 1948 வரை இந்திய அரசில் தகவல் அதிகாரியாகவும் பணியாற்றினார். ஒரு நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக சேவகராக இருந்தார். குறிப்பாக பல ஆண்டுகளாக பட்டியலிடப்பட்ட சாதியினரிடையே , பாட்டாளி வர்க்கங்களின் முன்னேற்றத்திலும் ஆர்வமாக இருந்தார்.[3][4]

சொந்த வாழ்க்கை தொகு

வேலாயுதன், அரசியல்வாதியான தாக்சாயணி என்பவரை செப்டம்பர் 1941 இல் மணந்தார்.[5] மகாராட்டிர மாநிலம் வர்தாவிலுள்ள சேவா கிராமத்தில் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி தலைமையில் ஒரு தொழு நோய் பூசாரியாக இருந்து இவர்கள் திருமணம் நடைபெற்றது.[6] இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 1 மகள் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Velayudhan, R. (1952). "R. Velayudhan". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  2. "Contribution 1". abhilekh-patal.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  3. "Contribution 2". abhilekh-patal.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  4. "Contribution 3". abhilekh-patal.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  5. "Article on spouse". timesofindia.indiatimes.com. 27 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  6. "Marriage ceremony". medium.com. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வேலாயுதன்&oldid=3936156" இலிருந்து மீள்விக்கப்பட்டது