ஆறுநாட்டான் உலா

தமிழ் இலக்கியம்

ஆறுநாட்டான் உலா என்னும் நூல் உலா நூல்களில் ஒன்று. [1] தலைமகன் உலா வருவதைக் கண்டு மகளிரில் ஏழு பருவத்தினர் காதல் கொள்வதாக உலா நூல் அமைவது மரபு. இதில் முருகன் தனித்து உலா வராமல் தன் மனைவியர் வள்ளி, தெய்வானை ஆகியோருடன் உலா வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் சிறப்பினைச் சிலம்பொலி செல்லப்பன் பாராட்டியுள்ளார்.

ஆண் உலா வருவதைக் கண்டு பருவ மகளிர் அவன்மீது காதல் கொள்வதாகப் பாடுவது மரபு. இந்த நூலில் உலா வருவது தெய்வப் பதுமைகள். பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட ஆடவர் முருகனைப் பார்த்து அவன் அழகினில் தோய்கின்றனர். மகளிர் முருனின் துணைவியர் அழகில் தோய்கின்றனர். இது இந்த நூலில் காணப்படும் புதுமை.

பெண்களின் ஏழு பருவங்கள் போல, ஆண்களின் ஏழு பருவங்கள் காட்டப்படுவத்தை விக்கிமூலம் நூலில் காணலாம். இந்தப் பருவங்கள் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.


மேற்கோள் தொகு

  1. ஆறுநாட்டான் உலா, நூலாசிரியர் செங்கைப் பொதுவன், அச்சிட்டோர் மூவேந்தர் அச்சகம், சென்னை 14, பதிப்பு 22 மே, 1979
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுநாட்டான்_உலா&oldid=2797258" இலிருந்து மீள்விக்கப்பட்டது