ஆல்பிரெஃக்ட் டியுரே

செருமனிய ஓவியர், அச்சு தயாரிப்பாளர், கணிதவியலாளர் மற்றும் கோட்பாட்டாளர் (1471-1528)

ஆல்பிரெஃக்ட் டியூரெ (/ˈdʊərər, ˈdjʊərər/;[1] இடாய்ச்சு: [ˈalbʁɛçt ˈdyːʁɐ]; (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528)[2] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

ஆல்பிரெஃக்ட் டியுரே
ஆபிரெஃக்ட் டுயூரேயின் தன்னுருவப்படம் (1500), அட்டையில் எண்ணெய் வண்ண ஓவியம், ஆல்ட்டெ பினகொத்தெக்,மியூனிஃக்
தேசியம்செருனியர்
அறியப்படுவதுஅச்சுருவாக்கம், தீட்டோவியம், கீறுங்கலை

இளமைப் பருவம் தொகு

டியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகதி தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அத்துடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு பிள்ளைகள் வரை இருந்துள்ளனர். டியுரேயின் தந்தையின் பெயர் அஜ்டொசி (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜெர்மானியப் பெயரான டியுரே ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் டியுரே எனும் பெயர் ரியுரே என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது.

திருமணம் தொகு

 
டியூரே தன்னுடைய மனைவி ஆக்னஸ் ஃப்ரே யின் சுய உருவப் படத்தை 1494 ஆம் ஆண்டில் வரைந்த போது

1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டியூரே பாஸ்லே நகரத்திற்குச் சென்றாரர் . மேலும் அங்குள்ள தனது சகோதரனுடைய வீட்டில் தங்கினார்.[3] சிறிது காலத்திலேயே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். சூலை 7,1494 ஆம் ஆண்டில் தன்னுடைய 23 ஆம் வயதில் ஆக்னஸ் ஃப்ரே என்பவரை மணந்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை

இத்தாலிக்கு முதல் பயணம் (1494–1495) தொகு

திருமணம் ஆகி மூன்றுமாதத்திற்குள் இத்தாலிக்குத் தனியாகச் சென்றார். ஏனெனில் அங்கு உலகம்பரவுநோய் பரவி வந்தது. மேலும் அங்கு சென்று கலை உலகின் மாற்றங்களை கற்றுத் தேர்ந்தார்.[4]

ஆல்பிரெஃக்ட் டியூரெவின் ஓவியங்களின் பட்டியல் தொகு

தலைப்பு ஆண்டு செய்நுட்பம் வடிவமைப்பு காட்சியகம்
பார்பரா டியூரேவின் சுய உருவப்படம் 1490 நெய்யோவியம் 47 × 38 செண்ட்டி மீட்டர் ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி
டியூரேவின் தந்தையின் சுய உருவப்படம் 1490 நெய்யோவியம் 47.5 × 39.5 செண்ட்டி மீட்டர் உப்பிஸி, ஃப்ளோரன்ஸ்
புலம்பல்கள் 1498 நெய்யோவியம் 147 × 118 செண்ட்டி மீட்டர் ஜேர்மனிஷ்சஸ் நேஷனல்மயூயூம், நியூரம்பெர்க், ஜெர்மனி
சுய உருவப்படம் 1493 துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் 56.5 × 44.5 செண்ட்டி மீட்டர் இலூவா அருங்காட்சியகம், பாரிஸ்
துன்பகரமான மனிதன் (துன்பத்தின் உருவமான மனிதன்) 1493 நெய்யோவியம் 30 × 19 செண்ட்டி மீட்டர்
வளை விதானவழி (ஆர்ச்)முன் கன்னியும் குழந்தையும் 1495 c. நெய்யோவியம் 48 × 36 செண்ட்டி மீட்டர் பர்மாவுக்கு அருகிலுள்ள மமீனோ
ஃப்ரெடெரிக் சாக்சனிஸின் ஞானஸ்நானத்தின் உருவப்படம் 1496 டெம்பரா கேன்வாஸ் 76 × 57 செண்ட்டி மீட்டர் பெர்லின்
ட்ரெஸ்டென் அல்ட்ராபீஸ் (மூன்று பிரிவு ) ஜெர்மனியின் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்ஃபிரட் டியூரேவின் படைப்பு 1496- 1497 1496 நெய்யோவியம் 117 × 96.5 செண்ட்டி மீட்டர்  டிரெஸ்டன்
காட்டுப்பகுதியில் செயிண்ட் ஜெரோம் 1496 நெய்யோவியம் 23 × 17 செண்ட்டி மீட்டர் இலண்டன் தேசிய அருங்காட்சியகம்
பரலோகக் (சொர்க்கம்) காட்சி 1496 நெய்யோவியம் 23 × 17 செண்ட்டி மீட்டர் இலண்டன் தேசிய அருங்காட்சியகம்
கன்னிப் பெண்ணின் ஏழு கவலைகள் 1496 நெய்யோவியம் 109 × 43 செண்ட்டி மீட்டர் (மத்தியில் உள்ள பொருத்துப் பலகை), 63 × 46 செண்ட்டி மீட்டர் (ஒவ்வொரு பக்கமும் உள்ள பொருத்துப் பலகை) மியூனிக், ஜெர்மனி
ஓவியனின் தந்தை 1497 நெய்யோவியம் 51 × 40.3 செண்ட்டி மீட்டர்
இலண்டன் தேசிய அருங்காட்சியகம்
இளம்பெண்ணின் சுய உருவப்படம் 1497 நெய்யோவியம் 56 × 43 செண்ட்டி மீட்டர் பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனி
இளம் ஃபர்லகெரின் சுய உருவப்படம் 1497 நெய்யோவியம் 56.5 × 42.5 செண்ட்டி மீட்டர் பெர்லின் மாகாண அருங்காட்சியகம்
ஆணின் சுய உருவப்படம் 1497 துணியில் எண்ணெய் கொண்டு வரைதல் 24.2 × 20 செண்ட்டி மீட்டர் ஹெய்ன்ஸ் கஸ்டம்ஸ் சேகரிப்பு, க்ருஸ்லிங்கென்
மடோனா மற்றும் குழந்தை 1496 - 1499 நெய்யோவியம் 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி.
லாட் மற்றும் அவரது குழந்தைகள் 1496 - 1499 நெய்யோவியம் 52.4 × 42.2 செண்ட்டி மீட்டர் கலை அருங்காட்சியாகம், வாசிங்டன், டி. சி.
ஆதாம்- ஏவாள் 1507 நெய்யோவியம் 209 x 81 செண்ட்டி மீட்டர் மியூஸோ டெல் பிராடோ, மாட்ரிட்
புனித அன்னை மரியாளின் பிரார்த்தனை 1518 நெய்யோவியம் 53x 43 செண்ட்டி மீட்டர் பெர்லின் மாகாண அருங்காட்சியகம்

டியூரே செதுக்கிய சித்திரங்களின் பட்டியல் தொகு

படம் தலைப்பு ஆண்டு செய்நுட்பம் வடிவமைப்பு குழு தொகுதி பிரிவு
  புனித பாலின் சமயமாற்றம் 1494 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 295 × 217 மில்லிமீட்டர்
  மரணத்தால் தாக்கப்பட்ட பெண் 1495
செம்புத் தகட்டு உட்செதுக்கல்
110 × 92 mm பி92
  தி கிரேட் கூரியர் (பாதுகாவலர்)
1494- 1495
செம்புத் தகட்டு உட்செதுக்கல் 100 × 115 mm
  புனித குடும்பம் ( உடன் தும்பி உள்ளது) 1495 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 151 × 140 mm B44
  காதலின் அன்பளிப்பு 1495 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 151 × 140 mm B93
  ஊதாரித்தனமான மகன் 1494 - 1498 Copper engraving 247 × 191 mm B28
  காட்டில் புனித ஜெரோம் 1494 - 1498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 316 × 225 mm B61
  செயின்ட் ஜான் கிறிஸ்ஸ்டோமின் தவம் 1494 - 1498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 183 × 119 mm B63
  சிறிய அதிர்ஷ்டம் 14951496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 120 × 66 mm B78
  தி சுமால் கூரியர் (பாதுகாவலர்) 1496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 110 × 78 mm B80
  குக் மற்றும் அவரது மனைவி 1496 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 109 × 77 mm B84
  மூன்று உழவர்களின் உரையாடல் 14961497 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 108 × 77 mm B86
  உழவன் தனது மனைவியுடன் 14961498 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 109 × 77 mm B83
  நிர்வாணமான நான்கு பெண்கள் 1497 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 194 × 135 mm B75
  மரணத்தால் எச்சரிக்கப்பட்ட இளம் தம்பதியினர் 14961500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 194 × 120 mm B94
  குரங்குடன் மடோனா 14961500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 190 × 121 mm B42
  மருத்துவரின் கனவு 14961500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 190 × 121 mm B76
  கடல் அரக்கன் 14961500 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 248 × 189 mm B71
  புனித செபஸ்தியார் கட்டுண்ட நிலையில் 14971501 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 106 × 76 mm B56
  சூனியக்காரி 14981502 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 115 × 71 mm B67
  ஆதாம் , ஏவாளுடன் 1504 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 248 × 192 mm B1
  சிறிய குதிரை 1505 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 165 × 108 mm B96
  பெரிய குதிரை 1505 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 167 × 119 mm B97
  புனித ஜானுடன் புனித குடும்பம் 1510 216 × 190 mm B43
  மரத்தின் அடியில் மடோனா 1513 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 75 mm B35
  போர் வீரன் , இறப்பு, சாத்தான் 1513 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 246 × 188 mm B98
  விவசாய ஜோடியின் நடனம் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 74 mm B90
  புனித ஜெரோம் படித்துக்கொண்டிருக்கும் போது 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 247 × 188 mm B60
  சுவரின் அருகில் மடோனா 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 147 × 101 mm B40
  புனித அப்போஸ்தலர் பால் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 118 × 74 mm B50
  புனித அப்போஸ்தல தாமஸ் 1514 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 117 × 75 mm B48
  தோட்டத்தில் வேதனை 1515 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 224 × 157 mm B19
  புனித அந்தோனியார் 1519 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 98 × 142 mm B58
  சந்தையில்உழவரும் அவரது மனைவியும் 1519 செம்புத் தகட்டு உட்செதுக்கல் 98 × 142 mm B58

படிமக் காட்சியகம் தொகு

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "doo r-er, dyoo r-" "Dürer, Albrecht". Random House Webster's Unabridged Dictionary.
  2. Müller, Peter O. (1993) Substantiv-Derivation in Den Schriften Albrecht Dürers, Walter de Gruyter. ISBN 3-11-012815-2.
  3. Here he produced a woodcut of St Jerome as a frontispiece for Nicholaus Kessler's 'Epistolare beati Hieronymi'. Panofsky argues that this print combined the 'Ulmian style' of Koberger's 'Lives of the Saints' (1488) and that of Wolgemut's workshop. Panofsky:21
  4. Lee, Raymond L. & Alistair B. Fraser. (2001) The Rainbow Bridge, Penn State Press. ISBN 0-271-01977-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரெஃக்ட்_டியுரே&oldid=3770623" இலிருந்து மீள்விக்கப்பட்டது