ஆளில்லா எரிபொருள் நிரப்புதல்

ஆளில்லா எரிபொருள் நிரப்புதல் அல்லது இயந்திரமனித எரிபொருள் நிரப்புதல் (Automated fueling or Robotic fueling) என்பது எரிபொருள் நிரப்பும் செயல்முறையில் மனித உழைப்பை அகற்றிவிட்டு தானாக இயங்கும் இயந்திர மனிதனைப் பயன்படுத்தும் ஒரு நடவடிக்கை ஆகும். இயந்திர மனிதனின் கை காரின் மடலைத் திறந்து, திருகாணியை அகற்றி, குழாயைக் கையில் எடுத்து, எரிபொருள் கலனுக்குள் செலுத்தி எரிபொருள் நிரப்பும் பணியை இங்கு மேற்கொள்கிறது. கோணங்களும் சம உயரப் பரிமாண அளவுகள் மட்டும்தான் அந்த இயந்திர மனிதனின் தரவுத்தளத்திற்குத் தேவைப்படும் அம்சங்களாகும்.

கால வரிசை தொகு

  • 1963 – சார்லசு மேசு மற்றும் லீ டார்வின் இருவருக்கும் முதலாவது காப்புரிமை வழங்கப்பட்டது.[1]
  • ஏப்ரல் 1997 – கலிபோர்னியாவிலுள்ள சாக்ரமெண்டோவில் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் செல்லின் திறன் குழாய் அறிமுகப்படுத்தப்பட்டது..[2]
  • பிப்ரவரி 2008 – நெதர்லாந்தில் உள்ள ஓர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முதலாவது நிரப்பும் இடைநிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. .[3]
  • 2013 – அசுக்கி மற்றும் பியூவல்மேட்டிக்கு நிறுவனம் இணைந்து தானியக்க இயந்திர வாயு குழாய்கள் மூலம் எரிபொருள் நிரப்பும் செயல்முறையை செய்து காட்டியது.இதனால் 30 சதவீதத்திற்கும் குறைவான நேரத்தில் எரிபொருள் நிரப்பும் செயல் மேற்கொள்ளப்பட்டது.[4]
  • ஆக்த்து 2015 – மின்சார காரின் மின்னேற்றும் புள்ளியை சரியாக அடையாளங் காணும், பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இயந்திரக் கையை டெசுல்லா மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தியது [5].

மேற்கோள்கள் தொகு

  1. "Is The Long Wait for Robotic Fueling Finally Over?" (PDF). Wolf H. Koch, Ph.D. September 1997. பார்க்கப்பட்ட நாள் October 16, 2014.
  2. "Shell Gas Station Offers Service With a Cyborg". Associated Press. Los Angeles Times. April 10, 1997. பார்க்கப்பட்ட நாள் October 16, 2014.
  3. "Dutch unveil robot to fill car gas tank". Reuters. February 4, 2008. Archived from the original on அக்டோபர் 21, 2014. பார்க்கப்பட்ட நாள் October 16, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. https://gizmodo.com/self-filling-gas-station-pumps-welcome-to-the-lazy-fut-1453291611
  5. https://www.extremetech.com/extreme/211865-check-out-this-scary-robotic-arm-charger-for-the-tesla-model-s