ஆ. கருப்பையா

ஆ. கருப்பையா (A. Karuppiah) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் பிப்ரவரி 14 1932 அன்று பிறந்தார். தனது பள்ளிப் படிப்பினை கேரளாவில் உள்ள மூணாற்றில் முடித்தார். விவசாயத் தொழிலைச் செய்து வந்த கருப்பையா 1967ஆம் ஆண்டு கங்கைகொண்டான் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு 34,797 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் மீண்டும் 1971ஆம் நடைபெற்ற[1] தேர்தலிலும் இத்தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை “யார்-எவர்” (PDF). {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |ஆக்கியோர்= ignored (help); Unknown parameter |ஆண்டு= ignored (help); Unknown parameter |பதிப்பாளர்= ignored (help); Unknown parameter |முதல்= ignored (help); Unknown parameter |மூலத்தேதி= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கருப்பையா&oldid=3538126" இலிருந்து மீள்விக்கப்பட்டது