இசுடான்லி மருத்துவக் கல்லூரி

இசுடான்லி மருத்துவக் கல்லூரி (Stanley Medical College) தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 200 ஆண்டுகளுக்கு முன்பே (1740ல்) இவ்வமைப்பு உருவாக்கப்பட்டாலும்[1] கல்லூரியாக உருவாக்கப்பட்டது 1938ல் தான். என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
வகைபொது; மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம்1938
துறைத்தலைவர்மரு.R.சாந்தி மலர் M.D., D.A.,
அமைவிடம்
சென்னை, 600 001
தநா, இந்தியா
, , ,
வளாகம்நகர்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி .ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்

வரலாறு தொகு

மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782-ல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799-ல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910-ல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.[2]

ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933 இல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனை என 1936 சூலை 2 இல் மாற்றப்பட்டது. 1938 இல் அங்கு 72 மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 1963 இல் 150 ஆக உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டில் 250 மாணவர்கள் பயில்கின்றனர்.[3]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "From R'puram Medical School to Stanley Medical College". Madras Musings. March 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  2. "EMedicine Live -Stanley Medical College | Hospitals". Archived from the original on 2009-01-24. பார்க்கப்பட்ட நாள் 2009-01-07.
  3. முகமது ஹுசைன் (14 ஏப்ரல் 2018). "அன்று அன்னச் சத்திரம் இன்று மருத்துவமனை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)