இசுடீவ் இர்வின்

முதலை ஆர்வலர்

ஸ்டீவ் இர்வின் (Steve Irwin, பெப்ரவரி 22, 1962 - செப்டம்பர் 4, 2006), ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். முதலை வேட்டைக்காரர் என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.

இசுடீவ் இர்வின்
பிறப்பு22 பெப்பிரவரி 1962
Upper Ferntree Gully
இறப்பு4 செப்தெம்பர் 2006 (அகவை 44)
Batt Reef
கல்லறைAustralia Zoo
பணிதிரைக்கதை ஆசிரியர், வணிகர், தேடலாய்வாளர், herpetologist
சிறப்புப் பணிகள்The Crocodile Hunter
வாழ்க்கைத்
துணை/கள்
Terri Irwin
குழந்தைகள்Robert Irwin
விருதுகள்star on Hollywood Walk of Fame
இணையம்http://www.crocodilehunter.com/
கையெழுத்து

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். எட்டு வயதிலேயே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகுக்கு அறிமுகமானது அவருடைய நண்பர் 1990ல் எடுத்த நிகழ்படக் கோப்புகள் மூலமே.

 
முதலை ஒன்றிக்கு இர்வின் உணவூட்டும் காட்சி

.

இறப்பு தொகு

 
கொட்டும் திருக்கை (ஸ்டிங்கிறே) என்னும் நீர்வாழ் விலங்கு. இதற்கு அட்டவண்ணைத் திருக்கை என்றும் பெயர்

செப்டம்பர் 4, 2006 இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது பெருந்திருக்கை (stingray) என்றும் அட்டவண்ணைத் திருக்கை என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் திருக்கைமீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் 1938 இலும் 1945 இலும் நடந்தன.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீவ்_இர்வின்&oldid=3615606" இலிருந்து மீள்விக்கப்பட்டது