இடப் பெயர் என்பது, பெயர்ச்சொற்களில் ஒரு வகையான, இடத்தைச் சுட்டுகின்ற பெயர்கள் ஆகும். இந்த இடப் பெயர்ச்சொற்களை, பொது இடப் பெயர்கள், சிறப்பு இடப் பெயர்கள் என தமிழ் இலக்கணத்தில் மேலும் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொது இடப் பெயர்கள் தொகு

பொது இடப் பெயர்கள் என்பன, குறிப்பிட்ட ஒரு இடத்தின் பெயராக அல்லாமல், பொதுவாக இடத்தைக் குறிக்கும் சொற்கள் அல்லது பெயர்களாகும். எடுத்துக்காட்டாக:

  • கோயில்
  • ஊர்
  • மாநிலம்
  • நாடு

இங்கே கோயில் எனும்போது அது, கோயில்கள் எதையும் குறிக்கலாம். இது போலவே ஊர் எனும்போது அது பல இலட்சக்கணக்கான ஊர்களுக்கான பொதுவான பெயராகும். மாநிலம் என்பதும், நாடு என்பதும் கூட பொதுவாக எந்த ஒரு மாநிலத்தையோ, நாட்டையோ குறிக்க பயன்படும் இட வகைகளுக்கான பொதுவான பெயராக அமைந்துள்ளன. இதனால் இவை பொது இடப் பெயர்கள் எனப்படுகின்றன.

சிறப்பு இடப் பெயர்கள் தொகு

சிறப்பு இடப் பெயர்கள் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும் பெயராக அல்லாமல், குறிப்பிட்ட இடத்திற்கான தனித்துவமான பெயர்களாகும்.

  • திருகோணச்சரம்
  • வணடலூர்
  • தமிழ்நாடு
  • இலங்கை

இதில் திருகோணச்சரம், வண்டலூர், தமிழ்நாடு, இலங்கை போன்றன குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டுமே குறிக்கப் பயன்படும் சிறப்பு இடப் பெயர்களாகும். இதனால் இவை சிறப்பு இடப் பெயர்கள் எனப்படுகின்றன.

அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் கு உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்_பெயர்&oldid=3110347" இலிருந்து மீள்விக்கப்பட்டது