இடுக்கி முடிச்சு

இடுக்கி முடிச்சு (Constrictor knot) என்பது, மிகத் திறம்பட்ட பிணைப்பு முடிச்சுக்களுள் ஒன்று.[1][2][3] எளிமையானதும் பாதுகாப்பானதுமான இந்த முடிச்சு இறுகிய பின்னர் அவிழ்ப்பதற்குக் கடினமானது. இது பிரிநிலைக் கண்ணிமுடிச்சைப் போன்றது ஆயினும் சில வேறுபாடுகள் உண்டு.

இடுக்கி முடிச்சு
இடம்: இடுக்கி முடிச்சு
வலம்: இரட்டை இடுக்கி முடிச்சு
பெயர்கள்இடுக்கி முடிச்சு, Gunner's knot
வகைபிணைப்பு
தொடர்புபிரிநிலைக் கண்ணிமுடிச்சு, Transom knot, இறுக்கு முடிச்சு, மில்லரின் முடிச்சு, போவா முடிச்சு
ABoK
  1. 176, #355, #364, #1188, #1189, #1249, #1250, #1251, #1252, #2489, #2560, #3441, #3700, #3853

வரலாறு தொகு

முதன் முதலாக 1944 ஆம் ஆண்டில் கிளிபர்ட் ஆசிலியின் நூலில் இது வெளியிடப்பட்டது ஆயினும் இது இதற்குப் பல காலம் முந்தியது எனக் கருதப்படுகிறது.[4] தானே இதனை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்ததாக ஆசிலி கருதியதாகத் தெரிகிறது. ஆனால், ஆய்வுகள் இவர் இதனைக் கண்டுபிடித்திருக்க முடியாது என்கின்றன. இதன் தோற்றம் எவ்வாறிருப்பினும் இதனைப் பரவலாக அறிமுகப்படுத்தி அதனை இன்றைய நிலைமைக்குக் கொண்டுவந்தவர் ஆசிலியே என்பதில் ஐயம் இல்லை.[5]

முடியும் முறை தொகு

கீழே காட்டப்பட்டிருப்பதே இம் முடிச்சைப் போடுவதற்கான அடிப்படையான முறை ஆகும். எனினும், இதனை இடைக் கயிற்றிலும் போட முடியும்.

 
  1. பொருளை ஒருமுறை சுற்றிச் செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகத் திரும்பவும் கொண்டுவரவேண்டும்.
  2. பொருளுக்குப் பின்புறமாகக் கொண்டுசெல்ல வேண்டும்.
  3. செயல்முனையை நிலைப்பகுதிக்கு மேலாகக் கொண்டுவந்து, பின்னர் riding திருப்பத்துக்குக் கீழாகவும் நிலைத்தபகுதிக்குக் கீழாகவும் கொண்டுவந்து riding திருப்பத்துக்குக் கீழே ஒரு நுனி முடிச்சை உருவாக்க வேண்டும்.
  4. முனைகள் படத்தில் காட்டியபடி திருப்பங்களிடையே வெளிப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயன்பாடு தொகு

 
இரண்டு உலோகத்தண்டுகளைப் பயன்படுத்தி இறுக்கப்படும் தறுவாயில் உள்ள ஒரு இடுக்கி முடிச்சு

இடுக்கி முடிச்சு, தற்காலிகமான அல்லது ஓரளவு நிரந்தரமான கட்டுப் போடவேண்டிய இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. இதன் பிணைப்பு விசை சிறிய பகுதியில் இருப்பதால் சிறிய பொருட்களைக் கட்டுவதற்குப் பொருத்தமாக உள்ளது. மென்மையான, பைகளின் வாய்கள் போன்றவற்றை இம்முடிச்சைப் பயன்படுத்திக் கட்டலாம். இவ்வேளைகளில் விறைப்புத் தன்மை கொண்ட கயிற்றைப் பயன்படுத்தலாம். கடினமான பொருட்களைக் கட்டுவதாயின் மென்மையான இழுபடக்கூடிய கயிறுகளைப் பயன்படுத்தலாம். இம்முடிச்சு கட்டப்பட்ட பொருட்களை அதிகமாக நெருக்குவதனால் அப்பொருட்களின் மேற்பரப்புக்களிலோ அல்லது வடிவத்திலோ பழுதுகளை ஏற்படுத்தக்கூடும்.

வெட்டப்பட்ட பல்லிழைக் கயிறுகளின் முனை குலைந்துவிடாமல் இருப்பதற்காக தற்காலிகமாக அம்முனைகளைச் சுற்றிக் கட்டுவதற்கு இந்த முடிச்சுப் பயன்படுவது உண்டு.

குறிப்புகள் தொகு

  1. Clifford W. Ashley, The Ashley Book of Knots (New York: Doubleday, 1944), 224-225.
  2. Brion Toss, The Complete Rigger's Apprentice (Camden, Maine: International Marine, 1998), 10-13.
  3. Geoffrey Budworth, The Complete Book of Knots (London: Octopus, 1997), 136-139.
  4. Cyrus Lawrence Day, The Art of Knotting and Splicing, 4th ed. (Annapolis: Naval Institute Press, 1986), 112.
  5. Cyrus Lawrence Day, Quipus and Witches' Knots (Lawrence: The University of Kansas Press, 1967), 110-111.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_முடிச்சு&oldid=3233516" இலிருந்து மீள்விக்கப்பட்டது