இணைச்சொல் அகராதி

இந்நூலில் புலவர் இரா. இளங்குமரன் ஏறத்தாழ 400 இணைச்சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு விளக்கமும் தந்துள்ளார். பக்கங்கள் 5-11 இல் ஒரு சிறு ஆராய்ச்சி முன்னுரை தந்துள்ளார். இணைச்சொல்லை விளக்கும் முகமாக முதலில் அடுக்குமொழி, அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகிய இம்மூன்றினும் இணைச்சொல் எவ்வாறு வேறுபட்டது என்று விளக்குகின்றார். "இணைச்சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் பொருள் உண்டு" என்று விளக்குகின்றார்.

இணைச்சொல் அகராதி
நூல் பெயர்:இணைச்சொல் அகராதி
ஆசிரியர்(கள்):இரா. இளங்குமரன்
வகை:அகரமுதலி
துறை:அகரமுதலி
காலம்:1985
இடம்:சென்னை, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:206
பதிப்பகர்:திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு:1985
ஆக்க அனுமதி:இராமு. இளங்குமரன்
இணைச்சொல் அகராதி

இந்நூலில் தமிழின் சொல்வளம் பற்றி முதலில் குறிப்பிடும் பொழுது தமிழின் ஒருபொருள் பன்மொழியாக இருப்பனவற்றுக்கு யானை என்பதற்கு உள்ள 37 பெயர்களையும், அரி என்னும் சொல்லுக்கு உள்ள 113 பொருட்களையும் சுட்டுகின்றார் (பக்கம்-1). இணைச்சொற்களான "அக்கம் பக்கம்", "அக்குத்தொக்கு", "அக்குவேர் ஆணிவேர்" என்பனவற்றில் தொடங்கி "பொச்சரிப்பு பூழாப்பு", "முண்டும் முடிச்சும்" என்னும் சொற்களோடு நிறைவு செய்கிறார், தொகுப்பாசிரியர். சொற்களை சுருக்கமாக விளக்கிப் பொருள் கூறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைச்சொல்_அகராதி&oldid=2019390" இலிருந்து மீள்விக்கப்பட்டது