இண்டைட்டு

இண்டியம்-இரும்பு சல்பைடு கனிமம்

இண்டைட்டு (Indite) என்பது FeIn2S4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இண்டியம்-இரும்பு சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய கனிமமாகும்.

இண்டைட்டுIndite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
தயோசிபைனல் தொகுதி
சிபைனல் கட்டமைப்புத் தொகுதி
வேதி வாய்பாடுFeIn2S4
இனங்காணல்
நிறம்கருப்பு
படிக இயல்புபொதிவு, மணிகள்
படிக அமைப்புகனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுஉலோகம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.67
மேற்கோள்கள்[1][2][3]

நீர்வெப்பப் படிவுகளில் கேசிட்டரைட்டு கனிமத்திற்குப் பதிலாக இது தோன்றுகிறது. திசாலிண்டைட்டு, கேசிட்டரைட்டு, குவார்ட்சு போன்ற கனிமங்களுடன் இண்டைட்டு கனிமம் கலந்து காணப்படுகிறது [1][2]. உருசியாவின் தூரக்கிழக்கு பிரதேசம் கபரோவ்சுக் பிரதேசம், சீனாவின் லெசர் கின்கான் மலைத்தொடர், திசாலிண்டா வெள்ளீயப் படிவுகள் போன்ற பகுதிகளில் காணப்பட்டதாக 1963 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது [4].

மேற்கோள்கள் தொகு

  • Emsley, John. Nature's Building Blocks. Oxford, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850341-5
  • Schwarz-Schampera, Ulrich; Herzig, Peter M. (2002-06-10). Indium: Geology, Mineralogy, and Economics. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-43135-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டைட்டு&oldid=2585860" இலிருந்து மீள்விக்கப்பட்டது