இத்தாலியப் பலியாட்டம்
சதுரங்கத் திறப்பு
இத்தாலியப் பலியாட்டம் (Italian Gambit) என்ற சதுரங்கத் திறப்பு பின் வரும் நகர்வுகளை ந்கர்த்தி தொடங்கப்படுகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Bc5 4.d4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி50 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | கியூக்கோ பியானோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
பெரும்பாலும் கியூகோ பியானோ அல்லது கியுகோ பியானிசுசிமோ திறப்புகளின் அமைதியான மற்றும் மூடிய வரிசை நகர்வுகளுக்கு மாற்றாக இத்தாலிய பலியாட்டம் திறப்பு அடிக்கடி விளையாடப்படுகிறது. கருப்பு பின் வரும் நகர்வுகளை விளையாட முடியும்
- சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம்.(4...exd4, சிகாட்ச்சு பலியாட்டத் திறப்பின் இடமாற்ற நிலை, பொதுவாக மேக்சு லேங்கி தாக்குதலுக்கு அழைத்துச் செல்லும்);
- குதிரையால் சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம். (4...Nxd4),இதுவொரு பலவீனமான நகர்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் வெள்ளை 5.Nxe5 என்ற நகர்வை விளையாடவும், ஒரே நேரத்தில் வெள்ளையின் குதிரையும் அமைச்சரும் கருப்பின் f7 சிப்பாயை தாக்க அனுமதிக்கிறது.
- அமைச்சரைக் கொண்டு சிப்பாயை எடுத்துக் கொள்ளலாம். (4...Bxd4), கருப்புக்கு இந்த நகர்வு ஒரு சிறந்த நகர்வாகக் கருதப்படுகிறது.
4...Bxd4 தொகு
4...Bxd4 5.Nxd4 Nxd4 நகர்வுகளுக்குப் பின்னர்:
- 6.0-0, சியார்ச்சு கோல்டனோவ்சிகி சாதகமான நகர்வு என்கிறார். 4.0-0 Nf6 5.d4 என்ற நகர்த்தினால் மற்றொரு பலியாட்ட திறப்புக்கு இடமாற்றம் அடைகிறது. 6...Nf6, என்று கருப்பு நகர்வைத் தொடர்ந்தால் 7.f4 மற்றும் 7.Bg5 என்பவை வெள்ளைக்கு உரிய நகர்வுகளாகும். எனினும், 6...d6!? என்று நகர்த்தும் வாய்ப்பு கருப்புக்கு இருக்கிறது.
- 6.Be3, என்ற நகர்வு மியாமி மாறுபாட்டின் நிலைமாற்று என யூட் அசெர்சு மற்றும் சியார்ச்சு லேவன் தெரிவிக்கின்றனர். சமநிலையை எட்ட வெள்ளைக்கு போதுமான வாய்ப்பு ஆகும்.
- 6.f4?! என்ற நகர்வு கருப்பு அடுத்ததாக 6...d5 விளையாடலாமோ என சந்தேகத்துடன் நகர்த்தப்படும் நகர்வாக்க் கருதப்படுகிறது.
இதையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- Hooper, David and Kenneth Whyld (1996). The Oxford Companion to Chess. Oxford University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280049-3.