இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1937–40

இந்தி திணிப்பு எதிப்புப் போராட்டம் 1937–40 (Anti-Hindi agitation of 1937–40) தில்லி காங்கிரஸ் அரசின் அறிவுறுத்தல்களின் படி, சென்னை மாகாணத்தில், இந்தியை திணிப்பதற்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் ஆகும்.

1937ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி, சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணையிட்டது.

இந்த ஆணையை எதிர்த்து நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத் தலைவர் ஈ. வெ. இராமசாமி கடுமையாக எதிர்த்ததுடன், இந்தி திணிப்புத் தொடர்பான அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டாம் சென்னை மாகாணத்தில் 1937 முதல் 1940 முடிய மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. மாணவர்கள், இளைஞர் மற்றும் பொதுமக்கள் உண்ணாநோன்புகள், மாநாடுகள், ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள் மூலம் இந்தித் திணிப்பை எதிர்த்தனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது, இருவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட 1,198 நபர்களைக் கைது செய்ததன் விளைவாக அரசு, பொதுமக்களுக்கு விளக்கம் கூற கடமைப்பட்டிருந்தது. தில்லி மத்திய அரசிலிருந்து காங்கிரஸ் கட்சி, 1939களின் இறுதியில் ஆட்சியிலிருந்து விலகிய பின்னர், சென்னை மாகாண முதமைச்சர் இராசகோபாலாச்சாரியாரும் பதவி விலகினார். 1940ல் சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜான் எர்ஸ்கின் பிரபு, கல்வி நிலையங்களில் இந்தி மொழியை கட்டாயமாக கற்றுத் தரவேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றார். எனவே இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் முடிவிற்கு வந்தன.

பின்னணி தொகு

இந்திய விடுதலைக்குப் பின் உருவான இந்தியாவின் பொது மொழியாக இந்துசுத்தானி மொழியை பரிந்துரைக்கப்பட்டது. 1925ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி, தன் அலுவல் மொழியை இந்துஸ்தானியிலிருந்து, ஆங்கில மொழிக்கு மாறியது.[1]

இந்துஸ்தானி மொழியின் ஆதரவாளரகளான மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேருவும், இந்துஸ்தானி மொழி பேசாத மாகாணங்களில் இந்துஸ்தானி மொழியை பரப்ப காங்கிஸ் கட்சி கட்சியினர் பரப்ப வேண்டும் என விரும்பினர். [2][3][4]தமிழர்களை, வட இந்தியர்களுக்கு அடிமைத்தனம் செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இந்தி திணிப்பு என ஈ. வெ. இராமசாமி கருதினார். [5]

1937ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி, சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 14 சூலை 1937ல் இந்தி மொழி ஆதரவாளரான இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இராசகோபாலசாரி சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், 11 ஆகஸ்டு 1937ல்[6] உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் எனும் அறிவித்தார்.[7] ஈ. வெ. இராமசாமி மற்றும் நீதிக்கட்சியின் தலைவர் ஏ. டி. பன்னீர் செல்வம் ஆகியோர் உடனடியாக பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கும் அரசின் ஆனையை எதிர்த்து அறிக்கை விட்டனர். எனவே சென்னை மாகாணம் முழுவதும் 4 அக்டோபர் 1937 முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

21 ஏப்ரல் 1938ல், சென்னை மாகாண முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி, 125 உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக இந்தி மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை வெளியிட்டார். இராஜாஜியின் இந்த முயற்சி, தமிழ் மொழியை அழிக்கவும், இந்தி மொழியை வளர்க்கவும் வழிவகுக்கும் என இந்தி எதிர்ப்பாளர்களால் கருதப்பட்டது. எனவே இராஜாஜி மற்றும் இந்தி திணிப்புக்கும் எதிராக சென்னை மாகாணம் முழுவதும் போராட்ட ங்கள் துவங்கியது.

மேலும் சூலை 1ம் தேதி இந்தி மொழி நாள் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், கருப்புக் கொடி ஏந்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துதல், அரசு அலுவலகங்கள் முன் நின்று மறியல் செய்தல், இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல் மூலம் இந்தி திணிப்புக்கு குரல் எழுப்பப்பட்டது.[8] and 3 December 1938[9])

சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பகுதிகளில், தமிழ் மொழி பேசும் மாவட்டங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றது.[7]

பிப்ரவரி 1940 இந்தி மொழி திணிப்பு அரசாணையை திரும்பப் பெறும் வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாலமுத்து நடராசன் உயிரிழந்தனர். ஈ. வெ. இராமசாமி உள்ளிட்ட ஏறத்தாழ 1,200 பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தி திணிப்பு அரசாணை திரும்பப் பெறல் தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கு கொள்ள வேண்டு என கட்டாயப்படுத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தீர்மானத்தின் படி, 29 அக்டோபர் 1939ல் சென்னை மாகாண முதலமைச்சர் பொறுப்பிலிருந்து இராஜாஜி விலகினார். எனவே சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சி நிறுவப்பட்டது. 31 அக்டோபர் 1939 அன்று, ஈ. வெ. இராமசாமி ஆளுநரை அனுகி, சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தி திணிப்பு அரசாணையை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைத்தார்.[10]

21 பிப்ரவரி 1940 அன்று, சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு, இந்தி மொழி கற்பது கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தி மொழி கற்கலாம் என அரசாணை வெளியிட்டார். [11]

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு