இந்தியா-ஜப்பான் உறவுகள்

இந்தியாவும் சப்பானும் காலம்காலமாக நல்லுறவுகளைப் பேணிவந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் சப்பானும் கலாச்சார பரிமாற்றங்களை பகிர்ந்துள்ளன. குறிப்பாக சப்பானின் முக்கிய சமயமான புத்த மதம் இந்தியாவில் பிறந்த புத்தரால் உருவாக்கபட்டதாலும் அதிக பிணைப்புகளை கொண்டுள்ளதற்கு ஒரு காரணமாக உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது சப்பானின் இராணுவமும் சுபாசு சந்திர போசின் தலைமையில் துவங்கப்பட்ட இந்திய இராணுவத்துடன் கூட்டமைத்து பிரித்தானியப் படையை எதிர்த்தது. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் சப்பானும் முன்னிலையில் உள்ளது. தில்லி மும்பை இடையிலான தொழில்துறைக் கட்டமைப்புக்கு உதவியது.[1]

இந்தியா-சப்பான் உறவுகள்
India மற்றும் Japan நாடுகள் அமையப்பெற்ற வரைபடம்

இந்தியா

சப்பான்

சப்பானிய நிறுவனங்களான சோனி, டொயோட்டா, ஓண்டா போன்றவை இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளன. சப்பான் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய வியாபார சந்தையாக விளங்குகிறது. சப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான சுசூக்கி இந்தியாவில் கூட்டு நிறுவனமாக மாருதி சுசூக்கி என்கிற பெயருடன் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

வர்த்தக உறவுகள் தொகு

இந்தியாவும் ஜப்பானும் 2011-ல் ஒருங்கிணைந்த சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்துகொண்டன . ஆனால் அதன் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கவில்லை.உதாரணமாக , 2012-13-ல் ஜப்பான் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு சுமார் ரூ. 1,11,660 பில்லியனாக இருந்தது. ஆனால், இது இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் 2.2% முதல் 2.5%தான். அதுவும் ஜப்பானின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் வெறும் 1%தான்.[1]

பாதுகாப்பு தொடர்பான உறவுகள் தொகு

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கலந்துகொண்டார்.[2] அவர் வருகையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளில், ‘ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆணையத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை கலப்பது’ என்ற முடிவும் அடங்கும் . இந்தியக் கடற்படையும் ஜப்பானியக் கடற்படையும் 2013-ல் சென்னை அருகில் கடலில் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இம்மாதிரியான கூட்டுப் போர் ஒத்திகைகளை இனி தொடர்ந்து அடிக்கடி மேற்கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "பொருளாதாரம் நட்பாதாரம்!". 31 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நாளை இந்தியா வருகை". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா-ஜப்பான்_உறவுகள்&oldid=3927678" இலிருந்து மீள்விக்கப்பட்டது