இந்திய-பாக்கித்தான் சைகை மொழி

இந்திய-பாகித்தான் சைகை மொழி ஆங்கிலச் சுருக்கம் (IPSL) என்பது தெற்காசிய துணைக்கண்டத்தில் குறைந்தபட்சம் 15 மில்லியன் செவித்திறன் குறைபாடு உடையோரால் பயன்படுத்தப்படும் சைகை மொழியாகும்.[4][5] பல்வேறு சைகை மொழிகளைப் போலவே, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சைகை மொழிகளைப் பட்டியல் இடாததாலும், பெரும்பாலான சைகை மொழி ஆய்வுகள் இந்தியாவின் வடபகுதி மற்றும் நகர்ப்புறங்களில் கவனம் செலுத்தி இருப்பதாலும், சைகை மொழி பேசுவோர் குறித்தான எண்ணிக்கையை உறுதியாகக் கணிப்பது கடினமாக கருதப்படுகிறது.[6][7] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய-பாகிஸ்தானிய சைகை மொழி, உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் சைகை மொழியாக கருதப்படுகிறது, மேலும் எத்னொலோக் என்ற இணைய பதிப்பகத் தகவல் படி, உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக 151 வது இடத்தைப் இந்த சைகை மொழி பிடித்துள்ளது.[8]

இந்திய-பாக்கித்தான் சைகை மொழி
நாடு(கள்)இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
இந்தியாவில் 6,000,000 (இந்திய சைகை மொழி, ins), பாக்கித்தானில் 1,080,000 (பாக்கித்தான் சைகை மொழி, pks), வங்காளதேசத்தில் 450,000 (மேற்கு வங்காள சைகை மொழி, wbs)  (2021)
நேபாள சைகை மொழி
பேச்சு வழக்கு
பெங்களூரு-சென்னை சைகை மொழி
மும்பாய் சைகை மொழி
கொல்கத்தா சைகை மொழி
தில்லி சைகை மொழி
வட-மேற்கு மாகான சைகை மொழி
பஞ்பாப்-சிந்து சைகை மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Variously:
ins — இந்திய சைகை மொழி
pks — பாக்கித்தானிய சைகை மொழி
wbs — மேற்கு வங்காள சைகை மொழி
மொழிக் குறிப்புindo1332  (இந்திய-பாக்கித்தான் சைகை)[1]
indi1237  (Indian SL)[2]
paki1242  (Pakistan SL)[3]

சில மொழியியல் அறிஞர்கள் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ள சைகை மொழி வகைகளை இந்திய-பாக்கித்தான் சைகை மொழியின் கிளை மொழிகளாகக் கருதுகின்றனர். மற்ற சில வகை சைகை மொழிகள் தனி மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ISO 639-3 படி தற்போது பின்வருமாறு சைகை மொழிகளை வேறுபடுத்துகிறது.

  • இந்திய சைகை மொழி (ins),
  • பாக்கித்தான் சைகை மொழி (pks),
  • மேற்கு வங்காள சைகை மொழ (கொல்கத்தா சைகை மொழி) (wbs), மற்றும்
  • நேபாள சைகை மொழி (nsp).[7]

மேற்கோள்கள் தொகு

  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "இந்திய-பாக்கித்தான் சைகை". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "இந்திய சைகை மொழி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "பாக்கித்தான் சைகை மொழி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. Vasishta, M., J. C. Woodward, and K. L. Wilson (1978). "Sign Language in India: Regional Variation within the Deaf Population". Indian Journal of Applied Linguistics 4 (2): 66–74. 
  5. Ethnologue gives the signing population in India as 2,680,000 in 2003.
    Gordon, Raymond G. Jr. (ed.) (2005). Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International. {{cite book}}: |author= has generic name (help)
  6. Ulrike Zeshan (2000). Sign Language of Indo-Pakistan: A description of a Signed Language. Philadelphia, Amsterdam: John Benjamins Publishing Co.
  7. 7.0 7.1 Indian Sign Language, Ethnologue
  8. What are the top 200 most spoken languages?, Ethnologue