இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 74

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 74 (Article 74) என்பது இந்தியக் குடியரசுத் தலைவரின் செயல்களை நிறைவேற்ற உதவும் வகையில் அமைச்சரவைக்கு வழங்கும் அதிகாரத்தினைக் குறிக்கிறது.

பிரிவு 74 தொகு

  1. பிரதம மந்திரியுடன் கூடிய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்குத் தேவைப்படின் அவருக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது உதவவோ இயலும். அவர் அந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல்படுவார். (இதில் தடித்த வார்த்தைகளில் இருப்பது 42 வது சட்டத்த் திருத்தத்தில் உள்ளது அது சனவரி 3, 1977 முதல் நடைமுறையில் உள்ளது.)[1]
  2. அந்த ஆலோசனைகளை மறு பரிசீலனை செய்யுமாறு அந்த அமைச்சரவைக் குழுவிற்கு குடியசுத் தலைவர் பரிந்துரை செய்யலாம். மறு பரிசீலனைக்குப் பின் வழங்கப்படும் ஆலோசனைகளின் படி குடியரசுத் தலைவர் செயல்படலாம். (இது 1978 ஆம் ஆண்டின் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டது)
  3. அவ்வாறு வழங்கப்படும் ஆலோசனைகளைப் பற்றி எந்த நீதிமன்றத்தினாலும் விசாரிக்க இயலாது.

சான்றுகள் தொகு

  1. Constitution of India (As modified up to 1st December, 2007 (PDF). Ministry of Law and Justice, Government of India. p. 35. Archived from the original (PDF) on 9 September 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2010. {{cite book}}: Unknown parameter |dead-url= ignored (help)