இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னாட்சிக் கலை அறிவியல் கல்லூரியாகும். இது இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியாகும். இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில், கலை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டம், மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[1]

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1998
அமைவிடம், ,
இணையதளம்[1]

கோவை அவினாசி சாலையில், நவ இந்தியாவில் அமைந்துள்ள இக்கல்லூரியானது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆகச்சிறந்த கலைக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இங்கு 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி 2016 ஆம் ஆண்டில் தன்னாட்சிக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள் தொகு

இங்கு 25 இளங்கலைப் பாடப் பிரிவு துறைகளும்[2], 19 முதுகலைப் பாடப் பிரிவு துறைகளும்[3], 11 ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன. [4]

மேற்கோள்கள் தொகு

  1. http://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=249
  2. "Hindusthan College of Arts & Science". www.hicas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  3. "Hindusthan College of Arts & Science". www.hicas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  4. "Hindusthan College of Arts & Science". www.hicas.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.