இந்தூர் முகமை

இந்தூர் முகமை (Indore), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.[1][2]இதன் தலைமையிடம் இந்தூர் நகரம் ஆகும்.

வரலாறு தொகு

மராத்தியப் பேரரசிற்கு எதிராக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் ஆட்சியாளரகள் நடத்திய மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய பேரரசு வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே மராத்தியப் பேரரசில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இந்தூர் பகுதி சுதேச சமஸ்தானங்களை நிர்வகிக்க இந்தூர் முகமை 1818-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையாளரின் கீழ் இந்தூர் முகமை செயல்பட்டது. இந்தூர் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1854-ஆம் ஆண்டு முதல் இந்தூர் முகமை, மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது.

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இந்தூர் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Princely States of India
  2. Imperial gazetteer of India: provincial series, Volume 12. University of California: Supt. of Govt. Print. 1908. p. 200.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தூர்_முகமை&oldid=3388356" இலிருந்து மீள்விக்கப்பட்டது