இனங்குறித்தல்

ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். இனங்குறித்தல் என்பது வட மொழியில் உபலட்சணம் எனப்படுகிறது.

நன்னூல் நூற்பா தொகு

ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே. - நன்னூல், 359 ஒருமொழி = பெயர், வினை, இடை, யுரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்று, ஒழி தன் இனம்கொளற்கு உரித்து = ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும்.

எடுத்துக்காட்டுகள் தொகு

கதிர்வேல் வெற்றிலை தின்றான். தொகு

இத்தொடர், கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப்பொருள்படும்.

இராமன், சோறு உண்டான். தொகு

இத்தொடர், இராமன் அரிசி சோற்றை மட்டுமா உண்டான். சோற்றோடு அதற்கு இனமான குழம்பு, இரசம், தயிர், அப்பளம் முதலானவற்றையும் சேர்த்து உண்டான் எனப் பொருள்படும்

ஆதாரம். தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனங்குறித்தல்&oldid=3052171" இலிருந்து மீள்விக்கப்பட்டது