இன்காக்களின் வரலாறு

இன்கா மன்னர்கள் தென்னமெரிக்காவை ஆண்ட செவ்விந்திய பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆவர். இவர்கள் வரலாற்றின் படி கி.பி.1100-1533வரை தென்னமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டனர். மான்கோ கபாக் என்ற இன்கா மன்னர் இப்பேரரசை தோற்றுவித்ததாக கூறுகின்றனர்.[1]

மன்னர்கள் பட்டியல் தொகு

எண் மன்னர் காலம்(கி.பி.)[2]
1. மான்கோ கபாக் தெரியவில்லை
2. சின்சி-ரோகா 1100-1140
3. லோக்யூ-யூபான்க்யுயி 1140-1195
4. மாய்டா-கபாக் 1195-1250
5. கபாக்-யூபான்க்யுயி 1250-?
6. ரோகா-2 ?-?
7. யாகுவார் ?-?
8. வீரகோசன் ?-1400
9. பச்சக்குட்டக் 1400-1448
10. யூபான்க்யுயி 1400-1448
11. டுபாக்-யூபான்க்யுயி 1448-1482
12. ஹுஅய்னெ-கபாக் 1482-1528
13. சுசி-ஹுஅச்கார் 1529-1533
14. அடஹுஅல்பா 1529-1533

முடிவு தொகு

மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை(theocracy) ந்டந்தது. இச்சூழ்நிலையிலே 177 வீரர்களுடன் மட்டுமே வந்த எசுபானிய தளபதி பிசாரோ அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை கொன்றான். மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது.[3]

உசாத்துணை தொகு

  • நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History

மேற்கோள்கள் தொகு

  1. இன்கா நாகரிகம்
  2. "the incas:empire builder of andes" National Geographics volume, w.stirling, p 282-312
  3. the seizure of divine monarch it self terrified the people, Jawaharlal Nehru, "glimpses of world history" ப-186
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்காக்களின்_வரலாறு&oldid=3251251" இலிருந்து மீள்விக்கப்பட்டது