இமான்சு சர்மா (சதுரங்க வீரர்)

சதுரங்க ஆட்ட வீரர்

இமான்சு சர்மா ( Himanshu Sharma ) ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

இமான்சு சர்மா
நாடுஇந்தியா
பிறப்புசெப்டம்பர் 16, 1983 (1983-09-16) (அகவை 40)
ரோத்தக், இந்தியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2017)[1]
உச்சத் தரவுகோள்2514 (ஆகஸ்ட் 2017)

தொழில் வாழ்க்கை தொகு

ஏப்ரல் 2017 இல், முதல் சர்தார் பிரகாஷ் சிங் நினைவுப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்ற பிறகு 2500 என்ற புள்ளியைக் கடந்தார். [2] இதன் மூலம், இவர் இந்தியாவின் 47 வது கிராண்ட்மாஸ்டராகவும் மற்றும் அரியானா மாநிலத்தின் முதல் கிராண்ட்மாஸ்டராகவும் ஆனார்.

ஜூலை 2017 இல், இவர் பார்பெரா டெல் வேல்ஸ் திறந்தநிலைப் போட்டிகளில் வென்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்த கரேன் எச். கிரிகோரியனை விட இவர் அரை புள்ளி முன்னிலையில் இருந்தார். இதுவே இந்தியாவுக்கு வெளியே இவர் வென்ற முதல் திறந்தநிலைப் போட்டியாகும் [3]

2022 இல், சென்னையில் நடைபெற்ற 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடில் [4][5][6]தீபத்தை ஏந்திச் சென்றவர்களில் ஒருவராக இருந்தார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. Shah, Sagar (April 19, 2017). "Himanshu Sharma is India's 47th GM and Haryana's first!".
  3. Jain, Niklesh (July 17, 2017). "GM Himanshu Sharma bags top prize at the Barbera Del Valles Open".
  4. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  5. "44th Chess Olympiad 2022 Calendar". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு.
  6. "Chennai to host Chess Olympiad". தி இந்து. 16 March 2022.
  7. Ahmed, Shahid (June 25, 2022). "Himanshu Sharma passes the Chess Olympiad Torch to Prithu Gupta".

வெளி இணைப்புகள் தொகு