இயல்புச் சொல்வழக்கு

சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள் தொகு

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.

இலக்கணம் உடையது

இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.

எ.கா.:

வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள்
மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள்
இலக்கணப்போலி

தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.

எ.கா.:

இல்முன், நகர்புறம் என்பவற்றை முன்றில், புறநகர் என்று வழங்குதல்
மரூஉ

கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.

எ.கா.:

யாவர் - யார்
இந்நாடு - இந்தநாடு

நன்னூல் பாடல் தொகு

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  • மணிவாசகன், அடியன் (நவம்பர் 2007). தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். பக். 183-184. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்புச்_சொல்வழக்கு&oldid=302283" இலிருந்து மீள்விக்கப்பட்டது