இரகுவார்ய தீர்த்தர்

இரகுவார்ய தீர்த்தர் (Raghuvarya Tirtha) (இறப்பு: 1557) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் மத்துவாச்சாரியாருக்கு அடுத்தடுத்து பதின்மூன்றாவது தலைவராக இருந்தார். [1] பாரம்பரியத்தின் படி இவர் ஜெயதீர்த்தரின் புகழ்பெற்ற 'நியாய சுத்தம்' என்ற நூலை தனது சீடர்களுக்கு ஏழு முறை கற்பித்தார். [2]

இரகுவார்ய தீர்த்தர்
இறப்புஅம்பி (கர்நாடகம்)
இயற்பெயர்இராமச்சந்திர சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருஇரகுநாத தீர்த்தர்

தொழில் தொகு

சைதன்ய மகாபிரபுவுடனான சந்திப்பு தொகு

வேதாந்த அறிஞர் பாலதேவரின் கூற்றுப்படி, சைதன்யர், மத்துவாச்சாரியரின் இறையியல் நிலைப்பாட்டை உண்மை என்றும் வேதாந்தத்திற்கு ஏற்பவும் ஏற்றுக்கொண்டார். சைதன்ய சரிதாமிருதம்- மத்திய-லீலாவின் ஒன்பதாம் அத்தியாயத்தின்படி, சைதன்யர் இவரைச் சந்தித்து ஆன்மீக வாழ்க்கையின் வழிமுறைகளையும், முடிவுகளையும், ஒன்பது வகையான ஆன்மீக நடைமுறைகளைப் பற்றி விவாதித்தார். [3]

படைப்புகள் தொகு

இவர் பல படைப்புகளை இயற்றினார். ஆனால் இவரது சில படைப்புகளில் நியாயம் பற்றிய லகுபரிக்சா (அல்லது ரகுபரிக்சா), நாராயணபாண்டிதாச்சார்யாவின் பிரமேயரத்னமாலிகா, கிருட்டிண துதி (கன்னட ஒரு பக்தி பாடல்) மட்டுமே கிடைத்துள்ளது. . [2]

குறிப்புகள் தொகு

  1. Das 1972, ப. 108.
  2. 2.0 2.1 Samuel 1997, ப. 118.
  3. Puri 2017, ப. 302.

நூலியல் தொகு

  • Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8120815759. 
  • Samuel, G. John (1997). Contribution of Karaṇāṭaka to Sanskrit. Institute of Asian Studies. https://books.google.com/books?id=Dfl0AAAAIAAJ. 
  • Das, Sambidānanda (1972). Sri Chaitanya Mahaprabhu. Sree Gaudiya Math. https://books.google.com/books?id=MdsXAAAAIAAJ. 
  • Puri, Swami B. P. (2017), Guru: The Universal Teacher, Simon and Schuster, ISBN 978-1683832454 {{citation}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுவார்ய_தீர்த்தர்&oldid=3021412" இலிருந்து மீள்விக்கப்பட்டது