இரட்டை-இசைப்பு மிகைப்பி

இரட்டை இசைப்பு மிகைப்பி (double-tuned amplifier) என்பது மிகைப்பி கட்டங்களுக்கு இடையே மின்மாற்றிவழி பிணைத்த இசைப்பு மிகைப்பி ஆகும். இதில் மின்மாற்றியின் முதன்மைச் சுருணையும் துணைச் சுருணையும் அவற்றின் குறுக்கே ஒவ்வொன்றும் ஒரு தனிக் கொண்மியால் இசைப்புறச் செய்யப்படுகின்றன. இது ஒற்றை இசைப்புச் சுற்றமைப்பை விட அகன்ற பட்டை அகலத்தையும் செங்குத்தான வடிப்பையும் தருகிறது.

மின்மாற்றியின் பிணைப்புக் கெழு ஓர் உய்யநிலை மதிப்பை அடையும்போது, மிகைப்பியின் அலைவெண் துலங்கலின்போது கடத்தல் பட்டையில் பெருமத் தட்டையாக அமைகிறது. அப்போது மிகைப்பியின் ஈட்டமும் ஒத்திசைவு அலைவெண்ணில் பெருமம் ஆகிறது. ஆனால் வடிவமைப்புகளில் இதைவிட கூடுதலான பிணைப்பைப் பயன்படுத்தி மேலும் கூடுதலான அகலம் வாய்ந்த கடத்தல்பட்டை பெறப்படுகிறது. ஆனால், இதனால் கட்த்தல்பட்டையின் நடுப்பகுதியில் சற்றே ஈட்டம் குறைகிறது.

இரட்டை இசைப்பு மிகைப்பிகளில் பலகட்டங்களால் ஓடைபோல் பிணைக்கும்போது ஒட்டுமொத்த மிகைப்பியின் கட்த்தல்பட்டை அகலம் மிகவும் குறைந்து விடுகிறது. இரண்டு அடுக்கு மிகைப்பி, ஒரடுக்கு மிகைப்பியைப் போல 80% அளவுக்குக் கட்த்தல் பட்டையைப் பெற்றுள்ளது. இந்தக் கடத்தல்பட்டை அகலத்தைக் குறைக்கும் இரட்டை இசைப்பு முறைக்கு மாற்றாக இடைவிட்டு இசைப்பு முறை உதவுகிறது. இடைவிட்டு இசைப்பு மிகைப்பிகள் ஒரடுக்கு மிகைப்பியை விடக் கூடுத்லான கட்த்த்ல்பட்டையைத் தரும்படி வடிவமைக்கப்படுகின்றன. என்றாலும் இடைவிட்ட இசைப்புக்கு கூடுதல் கட்டங்கள் தேவையாவதோடு, இரட்டை இசைப்பு முறையை விட ஈட்ட மதிப்பு குறைந்துவிடுகிறது.

வகைமைச் சுற்றமைப்பு தொகு

படத்தில் உள்ள சுற்றமைப்பில் பொது உமிழ்வி முறையில் இணைக்கப்பட்ட இருகட்ட மிகைப்பி ஒன்று காட்டப்பட்டுள்ளது. மின் வாயில் தகடையங்கள் அனைத்தும் தங்கள் இயல்பான பணிகளைச் செய்கின்றன, முதல் கட்ட உள்ளீட்டுக் கொண்மி வழக்கமான முறையில் தொடர்நிலையில் பிணைக்கப்பட்டுள்ளது. இது மின்வாயிலைத் தாக்காது.. என்றாலும், திரட்டியின் சுமையில் ஒரு மின்மாற்றி இனைந்துள்லது. இது சகொண்மிகளுக்கு மற்றாக கட்ட்த்திடை பிணைப்பாக அமைகிறது. மின்மாற்றியின் சுருணைகளில் தூண்டங்கள் அமைந்துள்ளன. எனவே, மின்மாற்றிச் சுருணைகளின் குறுக்கே இணைந்துள்ள கொண்மிகள் ஒத்திசைவுச் சுற்றதரை உருவாக்கி, மிகைப்பியின் இசைப்பு வடிப்புகளாகப் பயன்படுகின்றன. இத்தகைய மிகைப்பிகளில் கூடுதலாகக் காணப்படும் கூறுபாடு மின்மாற்றிச் சுருணைகளில் அமைந்துள்ள மடைகளாகும். இவை மின்மாற்றியை அவற்றின் சுருணைகளின் உச்சியில் இணைக்காமல் இடைப்பகுதியில் உள்ளீட்டுடனும் வெளியீட்டுடனும் இனைக்க உதவுகின்றன. இம்முறை மறிப்பு இனக்கப்படுத்தலுக்குப் பயன்படுகிறது; சுற்றமைப்பில் உள்ள இருமுனையச் சந்தித் திரிதடையங்கள் உள்ள மிகைப்பிகள் மிக உயர் வெளியீட்டு மறிப்பையும் மிகத் தாழ் உள்ளீட்டு மறிப்பையும் பெற்றுள்ளன. னைதச் சிக்கலைத் தீர்க்க மிக உயர் மறிப்புள்ள MOSFETகளைப் பயன்படுத்தித் தவிர்க்கலாம்.[1]

மின்மாற்றித் துணைச் சுருணை அடியில் இருந்து தரையுடன் இணைக்கப்பட்ட கொண்மி இசைப்புச் சுற்றதரின் பகுதியாக அமையாது. மாறாக, இவற்றின் நோக்கம் திரிதடைய மின்வாயில் தடையங்களை மாறுதிசை மின்னோட்டச் சுற்றதரில் இருந்து பிரிப்பதேயாகும் .

இயல்புகள் தொகு

ஒற்றை இசைப்புக்கு மாறாக இரட்டை இசைப்பைப் பயன்படுத்தல், மிகைப்பியின் பட்டை அகலத்தைக் கூட்டி துலங்களின் வடிப்பைச் செஞ்சரிவாக மாற்றுகிறது .[2] மின்மாற்றியின் இருபக்கத்தையும் இசைத்தல் இரு பிணிப்பு ஒத்திசைப்பிகளை உருவாக்கி பட்டை அகலத்தைக் கூட்டுகிற வாயிலை உருவாக்குகிறது. மிகைப்பியின் ஈட்டம் k எனும் பிணிப்புக் கெழுவைச் சார்ந்தமையும். இப்பிணிப்புக்கெழு பிறிதின் தூண்டம், M மதிப்பையும் இந்த M மதிப்பு, முதன்மை, துணைச் சுருணைகளின் தன்தூண்டங்கள் Lp, Ls ஆகியவற்றின் மதிப்புகளையும் முறையே பின்வருமாறு சார்ந்துள்ளது.

 

பகுப்பாய்வு தொகு

கட்டத்தின் ஈட்டம் தொகு

உச்ச அலைவெண் தொகு

உய்யநிலைப் பிணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bhargava et al., pp. 382–383
  2. Gulati, p. 432

நூல்தொகை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை-இசைப்பு_மிகைப்பி&oldid=2504780" இலிருந்து மீள்விக்கப்பட்டது