இரண்டாம் சம்பாஜி

கோலாப்பூர் மன்னர்


இரண்டாம் சம்பாஜி (Sambhaji II) (பிறப்பு:1698 - இறப்பு: 18 டிசம்பர் 1760), மராட்டியப் பேரரசர் சிவாஜியின் பேரனும், சத்திரபதி இராஜாராம் - இராஜேஸ்பாய் இணையரின் மகனும் ஆவார் போன்சலே வம்சத்தின் கோலாப்பூர் இராச்சியத்தின் மன்னரும் ஆவார்.

இரண்டாம் சம்பாஜி
முன்னையவர்இரண்டாம் சிவாஜி
பின்னையவர்மூன்றாம் சிவாஜி இராணி ஜிஜாபாய் (அரசப் பிரதிநிதி)
பிறப்பு1698 (1698)
இறப்பு18 திசம்பர் 1760(1760-12-18) (அகவை 61–62)
தந்தைசத்திரபதி இராஜாராம்
தாய்இராஜேஸ்பாய்

சாகுஜி, இராஜமாதாவான தாராபாயை வீழ்த்திய பின்னர், தாராபாய் கோல்ஹாப்பூரில் அரசை தமது நிறுவி, தம் குழந்தையான இரண்டாம் சிவாஜியின் அரசப்பிரதிநிதியாக 1710 முதல் 1714 முடிய ஆட்சி செய்தார்.

அச்சமயத்தில் தாராபாயின் சக்களத்தியான இராஜேஸ்பாய், தாராபாய்க்கு எதிராக புரட்சி செய்து, கோல்ஹாப்பூர் அரசை கைப்பற்றி, தன் குழந்தையான இரண்டாம் சம்பாஜியை அரியணையில் அமர்த்தி தான் அரசப்பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்.[1]இரண்டாம் சம்பாஜி 1714 முதல் 1760 முடிய கோலாப்பூர் அரசை ஆண்டார்.[2]

இரண்டாம் சிவாஜிக்குப் பின்னர் கோல்ஹாப்பூர் அரசின் அரியணை ஏறிய மூன்றாம் சிவாஜியின் அரசப்பிரதிநிதியாக ஜிஜாபாய் ஆட்சி செலுத்தினார்.

மேற்கோள்கள் தொகு

  1. Pati, Biswamoy; Sarkar, Sumit (2000). Issues in modern Indian history : for Sumit Sarkar. Mumbai: Popular Prakashan. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171546589.
  2. Kate, P.V. (1987). Marathwada under the Nizams, 1724-1948. Delhi, India: Mittal Publications. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170990178.

ஊசாத்துணை தொகு

இரண்டாம் சம்பாஜி
பிறப்பு: 1698 இறப்பு: 18 டிசம்பர் 1760
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் சிவாஜி
(கோல்ஹாப்பூர் மன்னர்)
கோலாப்பூர் மன்னர்
2 ஆகஸ்டு 1714 - 18 டிசம்பர்1760
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சம்பாஜி&oldid=3036306" இலிருந்து மீள்விக்கப்பட்டது