இரண்டாம் பராக்கிரமபாகு

இரண்டாம் பராக்கிரமபாகு (Parakkamabahu II) தம்பதெனிய இராச்சியத்தின் அரசனாக கிபி 1236 முதல் 1269 வரை அரசாண்டவன். இவன் தனது தந்தை மூன்றாம் விஜயபாகுவை அடுத்து தம்பதெனியாவை அரசாண்டான். இவனுக்குப் பின்னர் இவனது மகன் நான்காம் விஜயபாகு அரசாண்டான்.[1][2][3]

இரண்டாம் பராக்கிரமபாகு
Parakkamabahu II
தம்பதெனிய அரசன்
ஆட்சி1236-1269
முன்னிருந்தவர்மூன்றாம் விஜயபாகு
பின்வந்தவர்நான்காம் விஜயபாகு
வாரிசு(கள்)நான்காம் விஜயபாகு
முதலாம் புவனேகபாகு
தந்தைமூன்றாம் விஜயபாகு

தந்தை மூன்றாம் விஜயபாகு கலிங்கமாகனை விரட்ட எடுத்த முயற்சியில் இவன் வெற்றி கண்டான். கலாவாவிக்கு அண்மையில் நின்ற கலிங்கமாகனது படைகள் இவனால் துரத்தியடிக்கப்பட்டு மாகனும் விரட்டப்பட்டான். பின் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுத்த போது அதனையும் வெற்றி கொண்டான். பின் சாவக நாட்டைச் சேர்ந்த சந்திரபானு இரண்டு முறை படையெடுத்து அந்த இரண்டு படை நடவடிக்கைகளையும் தோல்வியடையச் செய்து சந்திரபானுவை கொன்றான்.

இரண்டாம் பராக்கிரமபாகு இலக்கிய வளர்ச்சிக்கு பணி ஆற்றினான். கவுசிலுமின, விசுத்திமாக்க எனும் நூலுக்கு விசுத்திமாக்கமகாசன்னத எனும் விளக்க நூலை எழுதினான். கல்வி பாண்டித்தியம் காரணமாக கலிகால சாகித்தியசர்வஞானபண்டிதன் என அழைக்கப்பட்டான். தம்பதெனியாகதிகாவத எனும் பெயரில் பௌத்தசமய ஒழுக்க கோவையை பொறித்தான்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Mahawamsa - King Parakramabahu ii". www.sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
  2. "Chapter V". lakdiva.org. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  3. Nishantha Joseph, Sujeewa. Sinhalese Kings (in சிங்களம்). Jayasinghe Book Publishers. pp. 62–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-0642-32-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_பராக்கிரமபாகு&oldid=3768957" இலிருந்து மீள்விக்கப்பட்டது