இராகா பட்டாச்சார்யா

இராகா பட்டாச்சார்யா (Raka Bhattacharya) மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவினைச் சேர்ந்த ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் முதன்மையாக வங்காளப் பாடல்களைப் பாடுகிறார்.[1][2]

இராகா பட்டாச்சார்யா
இயற்பெயர்இராகா பட்டாச்சார்யா
பிறப்பு19 மே 1985
கிருஷ்ணாநகர், நாதியா
பிறப்பிடம்கிருஷ்ணாநகர், மேற்கு வங்காளம்
இசை வடிவங்கள், ரவீந்திர சங்கீதம் , கணசங்கீத், வங்காள நாட்டுப்புற
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)குரல், ரிதம் கிட்டார், ஆர்மோனியம்
இசைத்துறையில்2016–முதல்
வெளியீட்டு நிறுவனங்கள்கேலிடோஸ்கோப் பயாஸ்கோப், அமரா முசிக்
இணைந்த செயற்பாடுகள்கபீர் சுமன்

2016ஆம் ஆண்டில் தனது முதல் தனிப்பாடலான 'பிரிஷ்டி பகோல்' மூலம் புகழ் பெற்றார். பிரிஷ்டி பகோல் என்பது புகழ்பெற்ற பெங்காலி இசைக்கலைஞர் கபீர் சுமனுடன் இணையாகப் பாடிய ஒரு காதல் பாடல். இந்தப் பாடலை அனிந்தியா பட்டாச்சார்யா இசையமைத்துள்ளார். கபீர் சுமன் மற்றும் கவிஞர் ஜோயாஷிஷ் கோஷ் ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். ஆரம்பத்தில் யூடியூப் மூலம் வெளியிடப்பட்ட இந்தப் பாடல், வங்காளப் பார்வையாளர்களால் நன்கு பாராட்டப்பட்டது.

சிரஞ்சீத் சக்ரவர்த்தி நடித்த காதல் நாடகமான குஹமானோப் (2017) திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். படத்தின் ஒலிப்பதிவில் இராகாவின் இரண்டு பாடல்கள், ஒன்று இரவீந்திரநாத் தாகூரின் சேஷ் கனேரி ரேஷ் மற்றும் ஷெடின் துஜோன் ஆகியோரின் தனிப்பாடல், கபீர் சுமனுடன் பாடிய மற்றொரு ரவீந்திர சங்கீதம் ஆகியவை அடங்கும். சுமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் ஒலிவரி தொடர்பாக ஒரே மாதிரியான பாராட்டை விமர்சகர்களிடம் பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Grihosobha Bangla : November 2017 edition. Delhi Press. 2017.
  2. "Music Release of Guhamanab". https://ebela.in/entertainment/music-release-of-guhamanab-dgtl-1.668575. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகா_பட்டாச்சார்யா&oldid=3909518" இலிருந்து மீள்விக்கப்பட்டது