இராபர்ட் ஆங்கஸ் ஸ்மித்

இராபர்ட் ஆங்கஸ் ஸ்மித் (Robert Angus Smith, 15 பெப்ரவரி 1817 – 12 மே 1884) ஒரு ஸ்காட்டிய வேதியியலாளர். காற்று மாசுபடுவதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர். அமில மழை என்ற சொற்றொடரை 1872-ம் ஆண்டு முதன்முதலில் பயன்படுத்தினார். சில வேளைகளில் இவர் அமில மழையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.[1][2][3][4]

1872 ஆண்டில் ஸ்மித் ஏர் அண்ட் ரெய்ன்: தி பிகினிங்ஸ் ஆஃபு கெமிக்கல் கிளைமட்டாலஜி என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது வளிமண்டல மழைப்பொழிவின் வேதியியல் பற்றிய அவரது ஆய்வுகளை வழங்குகிறது.

கல்வியும் இளமையும் தொகு

கிளாஸ்கோவில் உள்ள பொல்லோக்ஷாஸ் நகரில் பிறந்தார். ஒரு தனிப்பப்ட ஆசிரியராக பணிபுரிந்தார். ராயல் மான்செஸ்டர் நிறுவனத்தில் லியோன் பிளேபேரின் வேதியியல் ஆய்வகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்.

சல்ஃபோர்டின் கர்சல் மூரில் உள்ள புனித பால் தேவாலயக் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Thorpe, T. E. (1884). "Robert Angus Smith". Nature 30 (761): 104–105. doi:10.1038/030104a0. Bibcode: 1884Natur..30..104T. 
  2. Gibson, A.; Farrar, W. V. (1973). "Robert Angus Smith, FRS, and Sanitary Science". Notes and Records of the Royal Society 28 (2): 241–62. doi:10.1098/rsnr.1974.0017. 
  3. Gorham, E. (1982). "Robert Angus Smith, F.R.S., and 'Chemical Climatology.'". Notes and Records of the Royal Society of London 36 (2): 267–72. doi:10.1098/rsnr.1982.0016. பப்மெட்:11615878. 
  4. Hamlin, C. (2004) "Smith, (Robert) Angus (1817–1884)", Oxford Dictionary of National Biography, Oxford University Press. Retrieved 10 August 2007 எஆசு:10.1093/ref:odnb/25893 (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_ஆங்கஸ்_ஸ்மித்&oldid=3460962" இலிருந்து மீள்விக்கப்பட்டது