இராமர் கோவில், சைத்பூர்

பாக்கித்தானில் உள்ள இந்து கோவில்

இராமர் கோவில், சைத்பூர் (Rama Temple, Saidpur) பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்தில் உள்ள சைத்பூர் கிராமத்தில் அமைந்துள்ள இராமர் கோவிலைக் குறிக்கிறது. இராம் குந்த் வில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.[1] 14 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட காலத்தில் தனது குடும்பத்துடன் இப்பகுதியில் வாழ்ந்ததாக இந்துக்கள் நம்பும் இந்துக் கடவுளான இராமருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் மான் சிங் என்பவரால் கட்டப்பட்டது. [2]

இராமர் கோவில், சைத்பூர்
Rama Temple, Saidpur
சைத்பூர் கிராமத்தில் உள்ள இராமர் கோயிலின் காட்சி
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Pakistan Islamabad Capital Territory" does not exist.
அமைவிடம்
நாடு:பாக்கித்தான்
மாநிலம்:இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம்
மாவட்டம்:இசுலாமாபாத்து
அமைவு:சைத்பூர் கிராமம், இசுலாமாபாத்து
ஆள்கூறுகள்:33°44′41.2″N 73°04′04.8″E / 33.744778°N 73.068000°E / 33.744778; 73.068000
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோவில்

வரலாறு தொகு

பல நூற்றாண்டுகளாக, இந்துக்கள் கோவிலில் வழிபடுவதற்காக வெகுதூரம் பயணம் செய்தனர். யாத்ரீகர்களுக்கான ஓய்வு இல்லமான அருகிலுள்ள தர்மசாலாவில் தங்கினர். இராவல்பிண்டி அரசிதழின் அதிகாரப்பூர்வமான பதிவுகளின்படி இக்கோவில் 1893 ஆம் ஆண்டுக்கு முந்தையதாகும். இராமரும் அவரது குடும்பத்தினரும் ஒருமுறை தண்ணீரைப் பருகியதை நினைவுகூரும் வகையில் "இராம் குந்த்" என்ற இடத்திற்கு அருகிலுள்ள குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. இருப்பினும், 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, கோயில் கட்டிடம் வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்படவில்லை. 1960 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் உள்ளூர் மக்களுக்கான பெண்கள் பள்ளியாக பயன்படுத்தப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில், தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தால் இது சுற்றுலா தலமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது அனைத்து சிலைகளும் அகற்றப்பட்டுள்ளன. [3] [2]

மேற்கோள்கள் தொகு

  1. Yasin, Aamir (2016-10-09). "'Tourists, restaurants violate sanctity of Saidpur's temple'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  2. 2.0 2.1 Yasin, Aamir (2016-10-09). "'Tourists, restaurants violate sanctity of Saidpur's temple'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  3. Yasin, Aamir (2018-03-11). "Rawal Dam temple — reminiscent of a submerged village" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமர்_கோவில்,_சைத்பூர்&oldid=3840521" இலிருந்து மீள்விக்கப்பட்டது