இராய் படையாச்சி

இராதாகிருஷ்ண இலட்சுமண (இராய்) படையாச்சி (Radhakrishna Lutchmana "Roy" Padayachie, மே 1, 1950 - மே 5, 2012) தென்னாப்பிரிக்கத் தமிழரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கக் குடியரசின் பொதுத் துறை மற்றும் நிர்வாகத்திற்கான அமைச்சராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை தொகு

இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள சென்னைக்கு அருகிலுள்ள ஊரமங்கலம் ஆகும். இவரது கொள்ளுத் தாத்தனார் ஆங்கிலேயர்களால் ஆப்பிரிக்காவிற்கு கூலியாளாக அழைத்து வரப்பட்டவர். இவரது பெற்றோர் தென்னாப்பிரிக்காவிலும், பெற்றோரின் பெற்றொர் மொரிசியசிலும் பிறந்தவர்கள் ஆவர். டர்பன்-வெஸ்ட்வில் பல்கலைக்கழகத்திலும் இளமாணிப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்[1].

இவர் 1972 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசில் இணைந்தார். நடால் இந்தியக் காங்கிரசின் சிறப்பு உறுப்பினராகவும் பனியாற்றினார். உலக வங்கி, யுனெசுக்கோ, யுனிசெப்பு ஆகியவற்றின் சார்பாகப் பணியாற்றினார். 1976 முதல் 1979 வரை ரெக்கிட் அண்டு கோல்மன் நிறுவனத்தில் நுண்ணுயிரியல் வல்லுநராகவும், 1979 முதல் 1980 வரை ஷெல் நிறுவனத்தில் வேதியியல் ஆய்வாளராகவும் பணியாற்றினார். அதே வேளையில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசின் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஏப்ரல் 2004 ஆம் ஆண்டில் தகவல்தொடர்பு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் பொதுத்துறை மற்றும் நிருவாக துணை அமைச்சராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை பொதுத்துறை மற்றும் நிருவாக அமைச்சராகவும் பணியாற்றினார்[2].

மறைவு தொகு

இவர் எத்தியோப்பியாவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்டபோது 5 மே 2012 ஆம் ஆண்டு தங்கியிருந்த விடுதி அறையில் இறந்தார்[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Roy Padayachie, profile". Archived from the original on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  2. 2.0 2.1 Roy Padayachie dies in Addis Ababa, டைம்சு லைவ், மே 5, 2012

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராய்_படையாச்சி&oldid=3544186" இலிருந்து மீள்விக்கப்பட்டது