இரிஞ்சன்

காஷ்மீரின் சுல்தான்

இரிஞ்சன் (Rinchan) என்றும் அழைக்கப்படும் சத்ருதீன் ஷா (Sadruddin Shah) காஷ்மீரின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார். இவர் பொ.ச.1320 முதல் 1323 வரை காஷ்மீரை ஆண்டார்.

இரிஞ்சன் ஷா
காஷ்மீரின் சுல்தான்
சுல்சு வம்சத்தின் காஷ்மீரின் முதல் முஸ்லிம் மன்னர்
சுல்சு வம்சத்தின் காஷ்மீரின் முதல் சுல்தான்
ஆட்சிக்காலம்1320–1323 பொ.ச.
முன்னையவர்சுகதேவன்(1301–1302)
பின்னையவர்கோத ராணி
ஷா மிர் 1339–1342
துணைவர்கோத ராணி
குழந்தைகளின்
பெயர்கள்
ஐதர் கான்
பெயர்கள்
சுல்தான் சத்ருதீன் ஷா
மரபுசுல்சு வம்சம்
தந்தைஇலா-சென் தினோஸ்-கிரப்
மதம்சுன்னி இசுலாம்

பின்னணி தொகு

வரலாற்றாசிரியர் ஜோனராஜாவால் பொ.ச.1313 ஆம் ஆண்டில், கர்மசேனனின் தளபதியாக குறிப்பிடப்பட்ட "துல்-கதர்" என்ற பெயருடைய ஒரு படையெடுப்பாளர் தனது குதிரைப்படையுடன் காஷ்மீர் மீது படையெடுத்தார்.[1] காஷ்மீரின் வரலாற்றைக் குறிக்கும் நூலான பஹாரிஸ்தான்-இ-ஷாஹி "சுல்சு" என்ற பெயருடைய அவரை ஒரு துருக்கிய-மங்கோலிய படையெடுப்பாளர் என்று குறிப்பிடுகிறது.[2]

காஷ்மீரின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த சுகதேவன் அவரை அனைத்து மரியாதைகளுடன் வரவேற்றார் என்று ஜோனராஜா குறிப்பிடுகிறார். அவர் மோதலில் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும் அனைத்துப் பொருட்களுக்கும் புதிய வரிகளை விதித்தார்.[1] இது பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டி, சுகதேவனின் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.[1][a] இதைப்பற்றிய கருத்தினை பஹாரிஸ்தான்-இ-ஷாஹி குறிப்பிடவில்லை.- காஷ்மீரிகளைக் கொன்று குவிப்பதும் செல்வத்தைப் பெறுவதும் ஒரே நோக்கமாக இருந்ததென அது கூறுகிறது.[2]

சுயசரிதை தொகு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இரிஞ்சனின் முன்னோடிகளைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[1] இவர் திபெத்தில் இருந்து வந்ததாக பஹாரிஸ்தான்-இ-ஷாஹி' கூறுகிறது.[2] இவரை பௌத்த மத நம்பிக்கையின் லடாக்கி பிரபு என்றும் கூறுகிறது. இவரது தந்தையும் பிற உறவினர்களும் கலாமான்ய (அநேகமாக பால்டி) குலத்தின் கைகளில் துரோகமாகக் கொல்லப்பட்டனர்.[1] இரிஞ்சன், பழிவாங்கும் வகையில், அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதாகக் நடித்து, அவர்களை ஆற்றங்கரைக்கு விருந்துக்கு அழைத்து குடிக்கச் செய்து, நிராயுதபாணியாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடரியால் அவர்களைக் கொலை செய்தார்.[1] இந்த வெற்றி இருந்தபோதிலும், லடாக்கில் ஏராளமான எதிரிகள் இருந்தனர். மேலும் அவர் வடக்கு காஷ்மீரில் தனது வர்த்தகத்தைத் தேர்ந்தெடுத்தார்.[1]

அதிகாரத்திற்கு வருதல் தொகு

இரிஞ்சன் இலோகரா[2] ஆளுநர் இராம்சந்திரனால் ககனகிரி என்ற இடத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டார். இவர் அதிகாரப் படிநிலையில் ஏற்றம் கண்டார். இராமச்சந்திரனை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் சுகதேவனும் இதை அனுமதித்தார்.[1] நீண்ட காலத்திற்கு முன்பே, இரிஞ்சன் காஷ்மீரிகளை லடாக்கிற்கு அடிமைகளாக விற்று அபரிமிதமான செல்வத்தைப் பெற்றிருந்தார்.[1] கதேவனுக்கு அரியணை மீது சட்டபூர்வமான உரிமையில்லை என்பதால் சிம்மாசனத்தின் மீது இரிஞ்சன் தனது கண்களை வைத்திருந்தார்.[1] [2]

கொள்ளையர்களை விரட்டுவதற்கு ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்க மக்கள் அனுமதிக்கப்பட்டது இரிஞ்சனுக்கு உதவியது. நகரில் விசுவாசமுள்ள வீரர்களின் குழுவை உருவாக்கினார்.[2] இருப்பினும், இராமச்சந்திரன் இவரது சூழ்ச்சிகளுக்கு ஒரு கடினமான தடையாக இருந்தார். ஆனாலும் இரிஞ்சன் லடாக்கியர்களை கோட்டைக்குள் துணி வியாபாரிகளாக அனுப்பி பதுங்கியிருந்து படுகொலை இராமச்சந்திரனை செய்தார்.[1][2] கோட்டை கைப்பற்றப்பட்டது. அவரது உறவினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இராமச்சந்திரனின் மகள் கோத ராணியை, இரிஞ்சனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். [1]

ஜோனராஜாவின் கூற்றுப்படி, இரிஞ்சன் அதிகாரத்திற்கு வருவதை எதிர்க்க யாரும் இல்லை எனத் தெரிகிறது. சுகதேவன் காஷ்மீரை விட்டு வெளியேறினார். இருப்பினும், சுகதேவன் ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டதாக பஹாரிஸ்தான்-இ-ஷாஹி குறிப்பிடுகிறது.[1]

ஆட்சி தொகு

ஜோனராஜாவும் பஹாரிஸ்தான்-இ-ஷாஹியும் இரிஞ்சனை ஒரு கனிவான, நேர்மையான ஆட்சியாளர் என்று பாராட்டுகிறார்கள். சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் புனிதமானதாக இருந்தது. மேலும் இவரது சாமர்த்தியமான வழிகள் காஷ்மீரின் பொற்காலம் மீட்டெடுக்கப்பட்டதாக குடிமக்களை நம்ப வைத்தது. [1] [2] [b] ஷா மிர் பிரதமராக நியமிக்கப்பட்டார். [1]

கலை மற்றும் கட்டிடக்கலை தொகு

இரிஞ்சன் தனது அரண்மனைக்கு அருகில் ஷாவின் நினைவாக ஒரு கட்டிடத்தைக் கட்டினார். அதற்கு ஒரு சாகிரையும் நியமித்தார்.[2] இவர் 'பேத் பள்ளிவாசலை'யும் கட்டினார் (பெரிய பள்ளிவாசல் ). [2] [c] இரிஞ்சன்போரா என்ற இடத்தில் கோட்டையையும் கட்டினார். [1]

இறப்பு தொகு

பொ.ச.1323-இன் குளிர்காலத்தில் இரிஞ்சனுக்கு உடல்நலம் குன்றியது இவர் ஒருபோதும் குணமடையவில்லை. நவம்பர் 25 அன்று காலமானார்.[1] இவரது எச்சங்கள் பேத் பள்ளிவாசலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளன - 1909 ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆய்வாளர் ஏ.எச்.பிராங்கே என்பவரால் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 1990 [1] ஆண்டில் காஷ்மீர் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டது. இவரது மனைவி கோத ராணி மூலம் இவருக்கு ஐதர் கான் என்ற மகன் பிறந்தார். அவரை இவர் ஷா மிரின் பராமரிப்பில் ஒப்படைத்தார். [1]

மிர் பின்னர் இராணியுடன் சேர்ந்து ஐதரை கொன்று ஷா மிர் வம்சத்தை நிறுவினார்.[1]

குறிப்புகள் தொகு

  1. In Dharmashastra cannon, Brahmins are exempted from being levied with taxes.
  2. Both the sources mention the same incident about him resolving an (apparently) intractable dispute in an ingenious way.
  3. BIS reports that the original structure caught fire and was replaced with a smaller structure at an unknown date.

சான்றுகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 Slaje, Walter (2014). Kingship in Kaśmīr (AD 1148‒1459) From the Pen of Jonarāja, Court Paṇḍit to Sulṭān Zayn al-‛Ābidīn. Studia Indologica Universitatis Halensis - 7. Germany. pp. 77–91, 263–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3869770880.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிஞ்சன்&oldid=3395900" இலிருந்து மீள்விக்கப்பட்டது