இருதெலூரியம் புரோமைடு

இருதெலூரியம் புரோமைடு (Ditellurium bromide) என்பது Te2Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் நிலைப்புத் தன்மை கொண்ட கீழ்நிலை புரோமைடுகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். சால்கோசன்/ஆலைடு விகிதம் இரண்டைவிட குறைவாகும் போது , கந்தகம் மற்றும் செலினியம் சேர்மங்கள் போலல்லாமல் தெலூரியம் பலபகுதி கீழாலைடுகளாக உருவாகிறது. [1]

இருதெலூரியம் புரோமைடு
இனங்காட்டிகள்
12514-37-3 N
பண்புகள்
Te2Br
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் முத்தெலூரியம் இருகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் செலினியம் இருபுரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

தயாரிப்பு மற்றும் பண்புகள் தொகு

Te2Br சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. தளத்தில் இரட்டைப் பாலமிட்டு ஆக்ரமித்துள்ள Br அணுக்களுடன் கூடிய தெலூரியம் சங்கிலிகளால் இதன் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது. தெலூரியத்தை விகிதவியல் அளவின் அடிப்படையில் புரோமினுடன் சேர்த்து 215 ° செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் இருதெலூரியம் புரோமைடு தோன்றுகிறது. இதனோடு இயைந்த குளோரைடு மற்றும் அயோடைடுகளும் (Te2Cl மற்றும் Te2I) அறியப்படுகின்றன[2].

இவை தவிர மஞ்சள் நிறத்தில் திரவ Te2Br2 மற்றும் ஆரஞ்சு நிறத்தில் திண்ம TeBr4 முதலியனவும் அறியப்படுகின்றன[3]

மேற்கோள்கள் தொகு

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. R. Kniep, D. Mootz, A. Rabenau "Zur Kenntnis der Subhalogenide des Tellurs" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1976, Volume 422, pages 17–38. எஆசு:10.1002/zaac.19764220103
  3. Zhengtao Xu "Recent Developments in Binary Halogen–Chalcogen Compounds, Polyanions and Polycations" in Handbook of Chalcogen Chemistry: New Perspectives in Sulfur, Selenium and Tellurium, Francesco Devillanova, Editor, 2006, RSC. pp. 381-416. Royal Society எஆசு:10.1039/9781847557575-00455
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதெலூரியம்_புரோமைடு&oldid=2052226" இலிருந்து மீள்விக்கப்பட்டது