பொருள் வேதியியலில், இரும நிலை (binary phase) அல்லது இருமச் சேர்மம் (binary compound) இரண்டு வெவ்வேறு தனிமங்களைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். சில இரும நிலை சேர்மங்கள் மூலக்கூறுகளாக உள்ளன. எ.கா. கார்பன் டெட்ராகுளோரைடு (CCl4). பொதுவாக இரும நிலை நீட்டிக்கப்பட்ட திடப்பொருட்களைக் குறிக்கிறது. துத்தநாகம் மற்றும் கந்தகம் கொண்ட நாக சல்பைடு மற்றும் தங்குதன் மற்றும் கார்பன் கொண்ட தங்குதன் கார்பைடு ஆகியவை பிரபலமான சில உதாரணங்கள் ஆகும்.[1]

சோடியம் குளோரைடு ஒரு பிரபலமான இரும நிலை உப்பு ஆகும். இது Na மற்றும் Cl எனும் இரண்டு தனிமங்களால் ஆனது.

அதிக அளவு சிக்கலான அம்சங்களைக் கொண்ட இரும நிலைகள் அதிக உறுப்புகளைக் கொண்டுள்ளன, எ.கா. மும்மடி நிலையில் மூன்று தனிமங்களும், நான்மடி நிலையில் நான்கு தனிமங்களும் இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும_நிலை&oldid=3289754" இலிருந்து மீள்விக்கப்பட்டது