இறீபு திமசுக்கு ஆளுநரகம்

சிரியாவின் மாகாணம்

ரிஃப் டிமாஷ்க் கவர்னரேட் (Rif Dimashq Governorate, அரபு மொழி: محافظة ريف دمشقMoḥaafaẓat Reef Demashq, அதாவது "டமாஸ்கசின் ஊரக ஆளுநரகம்") என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தென்மேற்கில் குனித்ரா, தாரா, அல்-சுவைடா (வரலாற்று கால ஹௌரன் பகுதியை உள்ளடக்கியது), வடக்கில் ஹோம்ஸ், மேற்கில் லெபனான், தெற்கில் ஜோர்தான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.

ரிஃப் டிமாஷ்க் கவர்னரேட்
مُحافظة ريف دمشق
சிரியாவில் ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தின் அமைவிடம்
சிரியாவில் ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (திமிஷ்கு): 33°30′N 37°00′E / 33.5°N 37°E / 33.5; 37
நாடு சிரியா
நலைநகரம் டூமா
மவாட்டங்கள்10
பரப்பளவு
 • மொத்தம்18,032 km2 (6,962 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,36,000
 • அடர்த்தி160/km2 (410/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.)
ஐஎசுஓ 3166 குறியீடுSY-RD
மொழிகள்அரபு

இந்த ஆளுநரகமானது டமாஸ்கஸ் நகர-ஆளுநரகத்தை முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இது 18,032  கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2,273,074 (2004 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். [1]

சிரிய உள்நாட்டுப் போரில் இந்த ஆளுநரகம் ஒரு முக்கிய களமாக இருந்தது.

மாவட்டங்கள் தொகு

ஆளுநரகமானது பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களானது 37 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன. மார்கஸ் ரிஃப் திமாஷ்க் மற்றும் அல்-சபதானி மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்து குட்சயா மாவட்டமானது புதியதாக உருவாக்கப்பட்ட 2009 பிப்ரவரி வரை ஒன்பது மாவட்டங்கள் இருந்தன. ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை (2004 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 2,273,074 ஆகும்.

வார்ப்புரு:கோல்-பிரேக்

* - 2009 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமானது, மார்கஸ் ரிஃப் டிமாஷ்க் மாவட்டத்தின் சிலபகுதிகளையும், அல்-சபதானி மாவட்டத்தின் சில பகுதிகளையும் சேர்த்து உருவாக்கபட்டது.

குறிப்புகள் தொகு