இலங்கு வானூர்தி விபத்துக்கள்

உலங்கு வானூர்தி விபத்துக்கள் பல இந்திய அரசியல்வாதிகளைப் பலி கொண்டுள்ளன. முக்கியமான சில விபத்து விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1980 ஜூன் 21 தொகு

பலியானவர் தொகு

சஞ்சய் காந்தி. இவர் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் இளைய மகன்.

1997 நவம்பர் 17 தொகு

பலியானவர் தொகு

என்.வி.என்.சோமு. இவர் மத்திய அரசில் ராணுவத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய போது பயணித்த உலங்கு வானூர்தி, அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

2001 மே தொகு

பலியானவர் தொகு

நாதுங். இவர் அருணாசலப் பிரதேசத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர்.

2001 செப்டம்பர் 30 தொகு

பலியானவர் தொகு

மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கிய இடம் வகித்த இவர், மத்திய அமைச்சரையில் பங்கேற்றிருந்தவர்.

2002 மார்ச் 3 தொகு

பலியானவர் தொகு

பாலயோகி. வாஜ்பாயி பிரதமராக இருந்த போது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர். ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசக் கட்சியின் முக்கிய இரண்டாம் மட்டத் தலைவராக இருந்தார்.

2004 ஏப்ரல் 17 தொகு

பலியானவர் தொகு

சௌந்தர்யா. தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வளர்ந்து வந்த ஒரு நடிகை. பாஜக-வின் உறுப்பினராக இருந்தார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெங்களூர் சென்றிருந்த போது விபத்து நேரிட்டது.

2004 செப்டம்பர் தொகு

பலியானவர் தொகு

சங்மா. மேகாலயாவின் இனத் தலைவர். இவருடன் மூன்று மேகாலயா சட்டமன்ற உறுப்பினர்களும் மரணமடைந்தனர்.

2005 மார்ச் 30 தொகு

பலியானவர் தொகு

ஓ.பி.ஜிந்தால். இவர் ஹரியானா மின்துறை அமைச்சராக இருந்தார்.

2009 செப்டம்பர் 2 தொகு

பலியானவர் தொகு

ராஜசேகர ரெட்டி. ஆந்திர முதல்வராக இரண்டு முறை இருந்தவர். சித்தூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சென்ற இலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியது.

குறிப்புதவி தொகு

1.டைம்ஸ் ஆஃப் இந்தியா இணைய தளம் 2. என்.டி.டி.வி. இணையதளம் (http://www.ndtv.com/news/india/how_safe_are_choppers.php 3. தினத்தந்தி 04.09.09 மதுரைப் பதிப்பு செய்திக் கட்டுரை (பக்கம் 13)