இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம் (நூல்)

இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம் என்பது, இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலான பொருளாதார வரலாற்றைக் கூறும் நூலாகும். தமிழில் எழுதப்பட்ட இந்நூல், குறித்த புவியியற் பகுதியில் குடியேற்றவாதத்துக்கு முந்திய காலம் முதல் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களூடாகப் பிரித்தானியர் ஆட்சிக்காலம் வரையிலான பொருளாதார வரலாற்றைக் கையாள்கிறது. இதை கலாநிதி வி. நித்தியானந்தம் எழுதியுள்ளார். இந்நூல், உயர்கல்விச் சேவை நிறுவனத்தினால், 2003ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம்
நூல் பெயர்:இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம்
ஆசிரியர்(கள்):வி. நித்தியானந்தம்
வகை:பொருளாதார வரலாறு
காலம்:2003
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:236
பதிப்பகர்:உயர்கல்விச் சேவை நிறுவனம்
பதிப்பு:முதற்பதிப்பு

நூல் வரலாறு தொகு

இந்த நூலுக்கு முன்னோடியாக அமைந்தது 2001ம் ஆண்டு முதல் நூலாசிரியர் இலண்டனில் உள்ள ஒலிபரப்புச் சேவை ஒன்றுக்குத் தொடராக வழங்கிய பேச்சுக்கள் ஆகும். ஈழத் தமிழரின் சமூக பொருளாதார வரலாறு என்னும் தலைப்பில் ஒவ்வொன்றும் 15 நிமிடம் கால அளவு கொண்ட 95 பகுதிகளாக அமைந்த இப்பேச்சுக்களும், இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஏறத்தாழ 300 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப்படிகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்நூல் உருவானது.[1]

உள்ளடக்கம் தொகு

இதன் உள்ளடக்கம் எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைவிட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாசிரியரின் முன்னுரையும், நூலின் இறுதியில் ஆட்பெயர் அகரவரிசை, பொருட்பெயர் அகரவரிசை என்பனவும் தரப்பட்டுள்ளன. இதன் அத்தியாயங்களின் தலைப்புக்கள் பின்வருமாறு:

  1. பொருளாதார வரலாறும் வரலாறின்மையும் - ஒரு முன்னுரை
  2. பொருளாதார வரலாற்றுக்கான முன்கூட்டிய நிலைமைகள்
  3. யாழ்ப்பாண இராச்சியத்தின் பருநிலைப் பொருளாதார அமைப்பு
  4. காலனித்துவப் பொருளாதாரப் போக்கின் எழுச்சி: போர்த்துக்கேயர், டச்சுக்காரர் காலங்கள்
  5. காலனித்துவப் பொருளாதாரப் போக்கின் வளர்ச்சி: பிரித்தானியர் காலம்
  6. ஈழத்தமிழர் கல்வியின் பொருளியல்
  7. பௌதீக வளங்களின் பாவனை
  8. பொருளாதார வரலாறும் வரலாறின்மையும் - ஒரு பின்னுரை

மேற்கோள்கள் தொகு

  1. நித்தியானந்தம், வி., 2003. பக். ii.

உசாத்துணைகள் தொகு

  • நித்தியானந்தம், வி., இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம், உயர் கல்விச் சேவை நிறுவனம், யாழ்ப்பாணம், 2003.