இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று

இலங்கை அரசுக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான முதல் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நோர்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் சதாகிப் கடற்படைத்தளத்தில் செப்டம்பர் 16 - 18 திகதிகளில் இடம்பெற்ற முதல் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தச் சுற்றில் பின்வரும் இரு முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது, அவை:

  1. கண்ணிவெடி அகற்றும் பணிகளை விரைவு செய்வது
  2. உள்நாட்டு அகதிகளை மீள்குடியமர்த்துவது.
தாய்லாந்து பேச்சுவார்த்தை முதலாம் சுற்று
இலங்கை இனப்பிரச்சினை
காலம் செப்டம்பர் 16 - 18 2002
இடம் சதாகிப் கடற்படைத்தளம், தாய்லாந்து
முடிவு முடிவுகள்
தொடர்ச்சி தாய்லாந்து பேச்சுவார்த்தை இரண்டாம் சுற்று
அணிகள்
இலங்கை அரசு விடுத்லைப் புலிகள்
தலைவர்கள்
ஜீ. எல். பீரிஸ் அன்ரன் பாலசிங்கம்
குழுவினர்
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா அன்ரன் பாலசிங்கம்,விஸ்வலிங்கம் உருத்திரக்குமார், ஜெ. மகேஸ்வரன் , அடேல் பாலசிங்கம்
அணுசரனையாளர்/பார்வையாளர்
நோர்வே விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம்

இப் பேச்சுவார்த்தைகளில் மேலும் பேசுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் வெளியிட்ட பின்வரும் கருத்து "விடுதலைப் புலிகள் தனிநாடு என்கின்ற கருத்தோடு செயல்படவில்லை" The LTTE doesn’t operate with the concept of a separate state., அவர்கள் விட்டுக்கொடுத்து சமாதான தீர்வு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதற்கான ஒரு சமிக்கையாக அரசியல் அவதானிகளால் கருதப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு