இலங்கை ஆள்கூறு

புவியியல் ஆள்கூற்று முறைகளைப் பின்பற்றி இலங்கைக்கென உருவாக்கப் பட்டதே இலங்கை ஆள்கூறு ஆகும்.

இலங்கையில் அதியுயர் மலையான பீதுறுதாலகால மலையின் உச்சியை மையப் புள்ளியாகக் (Reference Point) ஆகக் கொண்டமைக்கப்பட்டு காட்டீசியன் (இலங்கைத் தமிழ்: தெக்காட்டு) முறையில் அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பில் ஒவ்வோர் அலகும் ஒரு மீட்டர் அளவினைக்குறிக்கிறது. பீதுறுதாலகால மலையின் உச்சியை மையமாக கொள்ளாமல் (0,0), இலங்கையின் எந்தப்பாக்கத்தினதும் ஆள்கூறு நேர்(+ ஆக) பெருமானமாக வரக்கூடியதாக வசதியாகவும் (200000, 200000) என்றவாறு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பீதுறுதாலகால மலையின் உச்சியில் இருந்து இலங்கையின் எந்த வொரு நிலப்பரப்பும் மேற்கிலோ, தெற்கிலோ 200கிலோ மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே உள்ளது. புதிய முறையில் பீதுறுதாலகால மலையின் ஆள்கூறானது 500, 000; 500, 000 என்றவாறு பரிந்துரைக்கப்பட்ட பொழுதும் பெரும்பாலான தேசப்படங்கள் பழைய ஆள்கூற்றிலேயே இருப்பதால் பழைய ஆள்கூற்றுமுறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

அநுகூலங்கள் தொகு

பிரதி கூலங்கள் தொகு

புவியியல் ஆள்கூற்று முறைகளைகளையே கூகுள் ஏர்த் ஆதரிப்பதால் இவற்றின் செல்வாக்கு ஓரளவு குறைந்து வருகின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஆள்கூறு&oldid=3666182" இலிருந்து மீள்விக்கப்பட்டது