இலட்சுமி விலாசு வங்கி

இந்தியத் தனியார் துறை வங்கி

இலட்சுமி விலாசு வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வைப்பகம் ஆகும். இது, தமிழகத்தின் கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கரூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்காக, கரூரின் ஏழு தொழிலதிபர்கள் வி. எஸ். என். ராமலிங்க செட்டியார் தலைமையில் ஒன்றாக இணைந்து இவ்வைப்பகத்தைத் தொடங்கினர். இவ்வைப்பகம் 1926 நவம்பர் 3 அன்று, இந்திய நிறுமச் சட்டம், 1913இன் படி கூட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன், தொழில் தொடக்கச் சான்றிதழை 1926 நவம்பர் 10 அன்று பெற்றுக் கொண்டது.

இலட்சுமி விலாசு வங்கி வரையறுக்கப்பட்டது
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1926
தலைமையகம்கரூர், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
முதன்மை நபர்கள்ராகேஷ் சர்மா (மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்நுகர்வோர் வங்கி
இணையத்தளம்www.lvbank.com
கரூரில் உள்ள இலட்சுமி விலாசு வங்கியின் தலைமையகம்

டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு தொகு

இலட்சுமி விலாஸ் வங்கி வராக் கடனில் மூழ்கி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நட்டம் ஈட்டியதால், இவ்வங்கியை சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், டிபிஎஸ் வங்கியின்[1], இந்தியக் கிளையான டிபிஎஸ் வங்கி, இந்தியாவுடன்[2] இணைக்க இந்திய அமைச்சரவை 27 நவம்பர் 2020 அன்று ஒப்புதல் வழங்கியது. [3] [4][5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_விலாசு_வங்கி&oldid=3072870" இலிருந்து மீள்விக்கப்பட்டது