இலாங்சியாங்கு அருவி

இலாங்சியாங்கு அருவி (Langshiang Falls) இந்திய மாநிலமான மேகாலயாவில் மேற்கு காசி மலை மாவட்டத்தில், நாங்சுடோயினிலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ள சங்ரியாங்கு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மவ்போன் கிராமத்திலிருந்தும் இலாங்சியாங் அருவியைக் காணலாம்.[1]

இலாங்சியாங்கு அருவி
Langshiang Falls
இலாங்சியாங் அருவி
இலாங்சியாங்கு அருவி is located in மேகாலயா
இலாங்சியாங்கு அருவி
அமைவிடம்
இலாங்சியாங்கு அருவி is located in இந்தியா
இலாங்சியாங்கு அருவி
இலாங்சியாங்கு அருவி (இந்தியா)
Map
அமைவிடம்மேற்கு காசி மலை மாவட்டம், மேகாலயா, இந்தியா
ஆள்கூறு25°26′43″N 91°13′43″E / 25.44521°N 91.22866°E / 25.44521; 91.22866
வகைசரிவு
மொத்த உயரம்337 மீட்டர்கள் (1,106 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிகின்சி நதி

நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் பொதுவாக 337 மீட்டர்கள் (1,106 அடி) என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இவ்வுயரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.[2] உயரம் சரியாக இருப்பதாகக் கருதினால், இது இந்தியாவின் 3 ஆவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.[3]

நாங்சுடோயினிலிருந்து 24-25 கிமீ தொலைவில் உள்ள இலாங்சியாங், சங்ரியாங்கு கிராமத்திலிருந்து சுமார் 30 நிமிட நடைப்பயணத்தில் உள்ளது. மைட்டி கின்சி நதி பிரிந்து ஆசியாவின் 2ஆவது பெரிய நதி தீவாக உருவான பிறகு இலாங்சாங்கு (லாங்சியாங்) பகுதியின் மேல்புறத்தில் சந்திக்கிறது. நதி ஒரு பள்ளத்தாக்கு வழியாக சென்று 'வேய் சிபி' என்று அழைக்கப்படும் ஒரு குளத்தை உருவாக்குகிறது. இக்குளம் மாபெரும் ஒரு பாறையால் சூழப்பட்டுள்ளது. நதி பின்னர் ஓர் ஆழமான பள்ளத்தாக்கிற்குத் திருப்பி, மேகாலயா மாநிலத்தின் மிக உயரமான மற்றும் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இலாங்சியாங்கு நீர்வீழ்ச்சியாக உருவாகிறது. இது சைத் உர்-நார்' என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. மாவ்போன் கிராமம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், அருகில் மற்றும் சுற்றியுள்ள பச்சை புல்வெளி மலைகளையும் உள்ளடக்கி சிறந்து பரந்த பார்வைக் காட்சிகளில் ஒன்றை வழங்குகிறது. இலாங்சோங்கில் வெய் சிபைக்கு அருகில் 'சையத் சோங்கு' அருவி மற்றும் 'வெய் சிபை' அருவி எனப்படும் இரண்டு அருவிகள் உள்ளன. நதி கீழ்நோக்கிப் பாய்வதால் ஆழமான பள்ளத்தாக்கு வழியாகச் செல்கிறது. வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் போன்ற இரண்டாம் நிலை நன்மைகளை கணிசமாக மேம்படுத்தும் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Langshiang Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  2. "Langshiang Falls". World Waterfalls Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  3. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாங்சியாங்கு_அருவி&oldid=3846352" இலிருந்து மீள்விக்கப்பட்டது